புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 டிச., 2012


உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான தெண்டுல்கர் மோசமான ஆட்டம் காரணமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார்

24 ஆண்டுகளாக விளையாடும் அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கருத்து எழுந்தது. இந்த நிலையில் விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொல்கத்தா
ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கிய 3-வது டெஸ்டில் தெண்டுல்கர் அபாரமாக விளையாடினார். அவர் 155 பந்துகளை சந்தித்து 76 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 

தெண்டுல்கரின் இந்த ஆட்டத்தை முன்னாள் கேப்டனும், டெலிவிசன் வர்ணனையாளருமான கங்குலி பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

தெண்டுல்கர் சதம் அடிக் காவிட்டாலும் அவரது ஆட்டம் சிறப்பாக இருந்தது. இது மிகவும் அபாரமான ஆட்டங்களில் ஒன்றாக இல்லா விட்டாலும் பிரமிப்பாக இருந்தது. ஆண்டர்சன் வேகப்பந்து வீச்சை எதிர்கொண்ட போது தெண்டுல்கர் தனது கால்களை சரியாக பயன்படுத்து கொள்ள வில்லை. இதனால் அவரது பந்தில் ஆட்டம் இழந்தார். 

இங்கிலாந்து சுழற்பந்தை எதிர்கொள்வதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த சிறப்பான ஆட்டம் மூலம் தெண்டுல்கரின் நம்பிக்கை மேலும் அதிகரிக்கும். 

இவ்வாறு கங்குலி கூறியுள்ளார்.

ad

ad