புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 டிச., 2012

Latest News
வவுனியாவில் அடை மழை! குளங்கள் உடைப்பெடுத்து பல கிராமங்கள் நீரில் மூழ்கின! யாழ். போக்குவரத்தும் பாதிப்பு
DECEMBER 23, 2012 

வவுனியாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக பல  கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி  மக்களும் வெளியேறி வருகின்றனர்.

அதன்படி பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 6 அவசர வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பூவரசங்குளம் ஊடன செட்டிகுளம் வீதியே இனம்காண முடியாமல் வெள்ளம் நிரம்பி  வழிந்தோடுகின்றது.

குறித்த வீதிக்கு அருகே உள்ள கந்தசாமி நகர், வீடியா நகர் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வெளியிடத் தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால் அங்குள்ள 39 குடும்பங்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் நொச்சிமோட்டைப் பாலம் மேவிப் பாய்வதனால் ஏ9 வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரியளவிலான வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஹயெஸ் போன்ற சிறியரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ad

ad