புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 டிச., 2012


 கேப்டன் குக் `டிரா' செய்யும் நோக்கில் மிகவும் மந்தமாக ஆடினார். 27-வது பந்தில்தான் அவர் தனது முதல் ரன்னை எடுத்தார். 
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 330 ரன் குவித்தது. பீட்டர்சன், ஜோரூட் தலா 75 ரன் எடுத்தனர். பியூஸ் சாவ்லா 4 விக்கெட்டும், இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும் எடுத்தனர்.
 
முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 297 ரன் எடுத்து இருந்தது. வீராட் கோலி 103 ரன்னும், டோனி 99 ரன்னும் எடுத்தனர்.
 
இன்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் கைவசம் 2 விக்கெட் என்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து ஆடியது. ஒஜாவுடன் இணைந்து அஸ்வின் பொறுப்புடன் ஆடினார். இந்திய அணி 133.4 ஓவரில் 300 ரன்னை தொட்டது. ஓஜா 3 ரன்னில் பனேசர் பந்தில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 317 ஆக இருந்தது கடைசி விக்கெட்டுக்கு அஸ்வினுடன், இஷாந்த்ச சர்மா ஜோடி சேர்ந்தார்.
 
இந்திய அணி 143 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரைவிட 4 ரன் குறைவாகும். அஸ்வின் 29 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆண்டர்சன் 4 விக்கெட்டும், சுவான் 3 விக்கெட்டும் எடுத்தனர்.
 
4 ரன்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சை ஆடியது. அந்த அணியின் ஆட்டம் மிகவும் மந்தமாக இருந்தது. குறிப்பாக கேப்டன் குக் `டிரா' செய்யும் நோக்கில் மிகவும் மந்தமாக ஆடினார். 27-வது பந்தில்தான் அவர் தனது முதல் ரன்னை எடுத்தார். அடுத்த ஒரு ரன்னை எடுப்பதற்கு அவருக்கு மேலும் 27 பந்து தேவைப்பட்டது. அந்த அளவுக்கு அவரது ஆட்டம் மிகமிக மந்தமாக இருந்தது. குக் 61 பந்தில் 3 ரன் எடுத்தார். 24 ஓவரில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 36 ரன் எடுத்தது.
 
மிகவும் மந்தமாக விளையாடிய குக் 13 ரன் இருக்கும்போது அஸ்வின் வீசிய ஓவரில் டோனியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த டிராட், காம்ப்டனுடன் ஜோடி சேர்ந்தார். காம்ப்டன் 34 ரன்னில் ஓஜா பந்தில் ஆட்டம் இழந்தார். அடுத்து சிறிது நேரத்திலேயே பீட்டர்சன் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து டிராட் உடன் பெல் ஜோடி சேர்ந்தார். இருவரும் 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை அவுட் ஆகவில்லை.
 
டிராட் 66 ரன்களுடனும், பெல் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 165 ரன்கள் இங்கிலாந்து அதிகமாக உள்ளது. இன்னும் கைவசம் 8 விக்கெட் உள்ளது. மேலும், இந்தியா இரண்டாவது இன்னிங்ஸ் விளையாட உள்ளததால் இந்த போட்டி டிராவில் முடிய வாய்ப்புள்ளது.

ad

ad