புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 பிப்., 2013


புலிகள் ஜெனீவாவை ஆக்கிரமித்து விட்டார்கள்: ரோகான் குணரட்ண !
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் ஜெனீவாவை ஆக்கிரமித்துவிட்டார்கள் என்று கூறியுள்ளார் ரோகான் குணரட்ண. சிங்கப்பூரில் இருந்து இயங்கிவரும் கற்கை மையத்தின் தலைவரும், மகிந்தரின் ஆலோசகருமான ரோகான் குணரட்ண , விடுதலைப் புலிகளின் முன்னணி அமைப்புகள் ஜெனிவாவை முற்றுகையிட்டு விட்டதாகவும், அதற்கான கடுமையான பரப்புரைகளில் அவர்கள் இறங்கிவிட்டதாகவும்
மேலும் தெரிவித்துள்ளார். உலகத் தமிழர் பேரவையும், அதன் உப அமைப்பும், நாடு கடந்த அரசும் மற்றும், மக்களவையும் இணைந்து பாரிய பரப்புரைகளை இலங்கைக்கு எதிராக ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் ஒரு அங்கமாகவே , தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் இளைய மகன் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்களை இவர்கள் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

ஒரே நாளில், இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியா, கனடா ஏனைய ஐரோப்பிய நாடுகளில் பெரும் அதிர்வலைகளைத் தோற்றுவித்துள்ளது பாலச்சந்திரன் கொலை தொடர்பாக வெளியாகியுள்ள ஆதாரங்கள். இதன் தொடர்ச்சியான மனித உரிமை அமைப்புகள், சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் ஐ.நா அதிகாரிகள் தமது கவலையை வெளியிட்டுள்ளார்கள். ஜெனீவாவில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராகக் கொண்டுரவுள்ள தீர்மாணம் வலுப்பெற்று வருகிறது. இதனை உடைக்க இலங்கை கடந்த பல மாதங்களாக பல நாடுகளை அணுகி தமக்கு ஆதரவு சேர்த்து வந்தது. ஆனால் அவை அனைத்தும் ஒரே நாளில் உடைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கை பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது. 

இதனை எவ்வறு ஈடுசெய்வது என்பது தொடர்பாக இலங்கை அரசானது, சிங்கப்பூரில் உள்ள சிங்கள புத்திஜீவிகளை அணுகியுள்ளது என்றும் விடையமறிந்த வட்டாரங்களில் இருந்து செய்திகள் தற்போது கசிந்துள்ளது.

ad

ad