புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 பிப்., 2013


இலங்கைக்கு எதிரான ஜெனீவா தீர்மானத்தை ஆதரிக்குமாறு பிரதமரிடம் நேரடியாக வலியுறுத்தப்படுமென தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார். 
ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவை கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானத்தை ஆதரித்து ஜப்பான் வாக்களிக்க வேண்டும் என்று அந்நாட்டு துணைத் தூதர் ஒசூகாவிடம் தமிழ் ஈழ ஆதரவாளர் அமைப்பு (டெசோ) சார்பில் வலியுறுத்தப்பட்டது.

டில்லியில் தி.மு.க. பாராளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு இல்லத்துக்கு ஜப்பான் துணைத் தூதர் ஒசூகா வியாழக்கிழமை வந்தார்.

அப்போது, பாலுவுடன்  டெசோ அமைப்பில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் உடனிருந்தார்.

டெசோ அமைப்பின் நோக்கம் குறித்தும், இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக அந்த அமைப்பு நடத்திவரும் பிரசாரம், போராட்டங்கள் குறித்தும் ஒசூகாவிடம் பாலுவும், திருமாவளவனும் விளக்கினர். 

ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐ.நா.மனித உரிமைகள் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் அறிவித்துள்ளதால், அத்தீர்மானத்தை ஜப்பான் ஆதரிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
அதைத் தொடர்ந்து, டெசோ தீர்மானம் குறித்தும், அந்த அமைப்பின் வேண்டுகோள் குறித்தும் ஜப்பான் அரசுக்கு தெரிவிக்கப்படும் என்று ஒசூகா கூறினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாலு;
டெசோ அமைப்பின் தீர்மான நகல்களை  தொடர்ந்து, தில்லியில் உள்ள ஐ.நா.சபையின் உறுப்பு நாடுகள் பிரதிநிதிகளிடம் கொடுப் போம்.

டெசோ அமைப்பின் கருத்தரங்கு டில்லியில் மார்ச் 7 ஆம் திகதி நடைபெறுகிறது. அதில் பா.ஜ.க.மூத்த தலைவர் வெங்கய்ய நாயுடு, ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ்,ராஷ்ட்ரீய ஜனதா தள  தலைவர் லாலு பிரசாத் யாதவ், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான் ஆகியோர் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம்.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முன்மொழிய வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி குரல் கொடுத்து வருகிறார். பிரதமரைச் சந்தித்து தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர் என்று கூறினார்.

ad

ad