புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2013




          ஞ்சையில், டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிய விழாவில் மைக் பிடித்த அமைச்சர் வைத்திலிங்கம், தன் பேச்சுக்கு கை தட்டாத விவசாயிகளைப் பார்த்து, ""உங்களுக்கெல்லாம் அறிவே இல்லையா? நீங்களெல்லாம் உணர்ச்சியற்ற பிண்டங்களா?'' என்று கேவலமாகப் பேசிய பேச்சு... விவசாயி கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பலைகளை உருவாக்கிவிட்டிருக்கிறது.

""விவசாயக் குடும்பத்தில் பிறந்த அமைச்சர் வைத்திலிங்கத்தால், விவசாயிகளை இப்படி அசிங்கப்படுத்த  எப்படி முடிந்தது? உலகத்தின் அச்சாணி என்று வையமறை வள்ளுவரால் ஏற்றிப் போற்றப்பட்ட விவசாயிகளை அறிவற்றவர்கள், உணர்ச்சியற்ற பிண்டங்கள் என்று பேசியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதற்கு அவருடைய தலைமை கண்டிக்கப் போகிறதா இல்லையா என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்'' என்கிறார் பட்டுக்கோட்டை விவசாயி வீரசேனன்.

தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் கக்கரை சுகுமாறன், ""அமைச்சர் வைத்தி லிங்கம் சொன்ன சொற்கள் கடும் கண்டனத்திற் குரியவை. தன் பேச்சை அவர் வாபஸ் வாங்க வேண்டும். அதற்காக வருத்தம் தெரிவிக்க வேண் டும். அன்றைய கூட்டத்தில் ஆளும் கட்சியினர் மட்டும்தான் நிவாரணம் வாங்கியிருக்கிறார்கள். அவர்களே அவருடைய தடித்தனமான பேச்சைக் கேட்டு ஆடிப் போயிருக்கிறார் கள். முதலமைச்சரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமென்பதற்காக, என் பெயரில் விளம்பரம் கொடுத்தவர்தான் இந்த வைத்திலிங்கம். அமைச்சர் வருத்தம் தெரிவிக்கவில்லையென்றால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்'' என்றார் நம்மிடம்.

""அய்யோ... அன்னைக்கு அமைச்சர் பேசிய பேச்சைக் கேட்டு நாங்க எல்லாரும் ஆடிப்போய்விட்டோம்'' என்கிறார்கள் பிரகலாதன், பூஜை மணி, சுப்பிர மணி.

""7-ஆம் தேதி தஞ்சையில் நடக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்ளப் போகிறாராம் ஜெயலலிதா. விவசாயிகளை இழிவுபடுத்திய அமைச்சர் வைத்திலிங்கத்தின் பேச்சுக்குப் பதில் சொல்லிவிட்டுத்தான் அவர் இந்த பாராட்டு விழாவுக்கு வரவேண்டும். விவசாயிகளை அரசும் அமைச்சர்களும் மதிக்கவில்லையே என்பதையே அமைச்சரின் பேச்சு காட்டுகிறது'' என்று குமுறினார் விவசாய சங்கம் சுவாமிமலை சுந்தர விமல நாதன்.

அமைச்சர் வைத்திலிங்கத் தின் பேச்சைக் கண்டித்து, தஞ்சைக்கு வரும் ஜெ.க்கு கருப்புக் கொடி காட்டுவதற்கான தீவிரத் திலும் சில விவசாய அமைப்பு கள் ஈடுபட்டுள்ளன.

-இரா.பகத்சிங்

ad

ad