புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2013


60 வயதாகி விட்ட நடிகர் மட்டும் இளம் ஹீரோயின்களுடன்
ஹீரோவாக நடிக்கலாமா?திமுக இளைஞரணி கேள்வி
அறுபது வயதை கடந்த ஸ்டாலின், தி.மு.க., இளைஞர் அணிச் செயலர் பதவியை வகிக்கிறார் என்பதை, மறைமுகமாக சுட்டிக்காட்டும் நையாண்டி வசனம்,மணிவண்ணன்
இயக்கிய "நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., (அமைதிப்படை 2)' என்ற திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளது.

சர்ச்சைக்குரிய இந்த வசனத்தை நீக்க வேண்டும் என, வலியுறுத்தி, கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது குறித்து ஆலோசிக்க, இம்மாதம், 27ம் தேதி, திருச்சியில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அவசரமாக கூடுகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன், "அமைதிப்படை' படத்தில், அரசியல்வாதிகளின் இன்னொரு முகம், தோலுரித்து காட்டப்பட்டது; அப்படம் வெற்றி பெற்றது. தற்போது "அமைதிப்படை' 2ம் பாகமாக, "நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,' என்ற படத்தை மணிவண்ணன் இயக்குகிறார்.
இப்படத்தின் ஒரு காட்சியில், மகளிர் அணி தலைவர் பதவியை நாகராஜசோழன் ஏற்கிறார். அதற்கு, "ஆம்பளையான நீங்கள் எப்படி, மகளிர் அணி தலைவராக பதவி ஏற்கலாம்' என்ற கேள்வியை கேட்கும் இளைஞர் ஒருவரிடம், அவர் தனக்கே உரிய லொள்ளு நடிப்பில், "60 வயது கிழவனெல்லாம், இளைஞரணி தலைவராக இருக்கும்போது, நான் மகளிர் அணி தலைவராக இருக்கக் கூடாதா?' என, எதிர்கேள்வி கேட்பது போன்ற காட்சி, அப்படத்தின் டிரைலரில் இடம் பெற்றுள்ளது. இளைஞரணியின் மாநில செயலர் பதவியில், தற்போது ஸ்டாலின் நீடிக்கிறார்.
தி.மு.க.,வின் அடுத்த தலைவர் பதவி, ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டால், தன் இளைஞர் அணி செயலர் பதவியை, தன் மகன் உதயநிதிக்கு விட்டுக் கொடுக்க, ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார் என, கூறப்படுகிறது. இச்சூழ்நிலையில், நையாண்டியாக வசனம் பேசும் காட்சி, "நாகராஜசோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ.,' என்ற படத்தில் இடம் பெற்றிருப்பது, தி.மு.க., இளைஞர் அணியினர் மத்தியில், கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, தி.மு.க., இளைஞரணி நிர்வாகிகள்,  ‘’தி.மு.க.,வுக்கு, இளைஞர் அணி தான் பக்கபலமாக உள்ளது. இளைஞரணி நிர்வாகிகளை தேர்வு செய்ய, இரவு பகலாக நேர்காணல் நடத்தி, நிர்வாகிகளை, ஸ்டாலின் தேர்வு செய்தார்.
 தி.மு.க., ஆட்சியில், திருநெல்வேலி மாவட்டத்தில், தி.மு.க., இளைஞரணி மாநாட்டை, கட்சி மாநாடுக்கு இணையாக நடத்தினார்.லோக்சபா தேர்தலை ஒட்டி, இளைஞரணி மாநாட்டை நடத்தவும் ஸ்டாலின் திட்டமிட்டு உள்ளார். தி.மு.க., உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட, "ஸ்மார்ட் கார்டு' போலவே, இளைஞரணி உறுப்பினர்களுக்கும், "ஸ்மார்ட் கார்டு'கள் வழங்க, ஸ்டாலின் திட்டமிட்டு கட்சியின் உயிரோட்டமாக, இளைஞர் அணியை உருவாக்கி வைத்துள்ள ஸ்டாலினை, கேலி செய்யும் வகையில், வசனம் பேசியிருப்பதை கடுமையாக கண்டிக்கிறோம். 
பேரன், பேத்தி எடுத்து, 60 வயதாகி விட்ட நடிகர் மட்டும், இளம் ஹீரோயின்களுடன் சேர்ந்து ஹீரோவாக நடிக்கலாமா? ஸ்டாலின் இளைஞரணி தலைவர் பதவியை வைத்துள்ளார் என்பதை மறைமுகமாக குறிப்பிடும் காட்சியை படத்திலிருந்து நீக்க வேண்டும். இல்லையென்றால், படம் ஓடுகிற தியேட்டர் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவோம். 
இதுகுறித்து ஆலோசிக்க, இம்மாதம், 27ம் தேதி, திருச்சியில், ஸ்டாலின் தலைமையில் இளைஞரணி மாநில, மாவட்ட அமைப்பாளர்கள் கூட்டம் நடை பெற உள்ளது. இயக்குநர் மணிவண்ணன் மற்றும் நடிகருக்கு எதிராக, தி.மு.க., இளைஞரணியினர், தீவிர போராட்டம் நடத்தவும் தயாராகவுள்ளனர்’’என்று கூறியுள்ளனர்.

ad

ad