புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2013


புனே அணியுடன் மோதல்: சென்னை சூப்பர் கிங்ஸ் ஹாட்ரிக் வெற்றி பெறுமா?
ஐ.பி.எல். 20 ஓவர் போட்டியில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை 3 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4
புள்ளிகள் பெற்றுள்ளது. சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சிடம் 9 ரன்னில் தோற்றது. 

2-வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 3-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 4 விக்கெட்டில் வென்றது. சென்னை சூப்பர் கிங்ஸ் 4-வது ஆட்டத்தில் புனே வாரியர்ஸ் அணியை நாளை (திங்கட்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடக்கிறது. 
புனே அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் `ஹாட்ரிக்' வெற்றி பெறுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை அணி வலுவாக இருப்பதாலும் சொந்த மண்ணில் விளையாடுவதாலும் `ஹாட்ரிக்' வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது. கேப்டன் டோனி, ஜடேஜா, ரெய்னா, பத்ரிநாத் ஆகியோரது பேட்டிங் சிறப்பாக உள்ளது. 
நேற்றைய ஆட்டத்தில் சொதப்பிய ஹஸ்சி, முரளிவிஜய் நாளை சிறப்பாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிறிஸ் மாரிஸ் நேற்றும் கெய்ல் உள்பட 3 பேர் விக்கெட்டை கைப்பற்றினார். ஆனால் ரன்களை விட்டு கொடுத்தார். அவர் நீக்கப்பட்டால் அல்பி மார்கலுக்கு வாய்ப்பு கிடைக்கும். வெற்றி பெற்ற அணியே நீடிக்க டோனி விரும்பினால் அல்பி மார்கலுக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படும். 
புனே வாரியர்ஸ் அணி 4 ஆட்டத்தில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்சை வென்றது. சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப், மும்பை இந்தியன்ஸ் அணிகளிடம் தோற்று இருந்தது. 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது. ஆரோன் பிஞ்ச், யுவராஜ்சிங், ரோஸ் டெய்லர், உத்தப்பா, ஸ்டீவ் சுமித் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்கள் அந்த அணியில் உள்ளனர்.

ad

ad