புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2013


விஜய் மல்லையா உள்ளிட்ட 612 இந்தியர்கள் வெளிநாடுகளில் குவித்துள்ள கறுப்புப் பணம்..


612 இந்திய முதலைகள்… இந்தியாவை சேர்ந்த தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பியுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் வினோத் ஜோஷி உள்ளிட்ட 612 வரி ஏய்ப்பு செய்துள்ளனர் என்று குளோபல் மீடியா கண்டறிந்துள்ளது.
இது தவிர உலகம் முழுவதும் 170 நாடுகளில் உள்ள தொழிலதிபர்கள், தீவிரவாத அமைப்புகள் செய்த தகிடுதத்தங்களை அம்பலப்படுத்தியுள்ளது.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இந்தியர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப் பணம் குறித்த விவரத்தை தோண்டி எடுத்துள்ளது குளோபல் மீடியா சர்வதேச பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு. சர்வதேச அளவில் இவர்கள் இணைந்து சுமார் 25 லட்சம் ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து, பல நாடுகளின் முன்னணி வரி ஏய்ப்பு, கருப்புப் பணக் கும்பலை அம்பலப்படுத்தியுள்ளனர். உலக அளவில் நிருபர்கள் இணைந்து நடத்திய முதல் மாபெரும் விசாரணையாக இது கருதப்படுகிறது.
சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுச் சங்கம்… சர்வதேச புலனாய்வு பத்திரிகையாளர்களின் கூட்டுச் சங்கம் (International Consortium of Investigative Journalists- ICIJ) அமெரிக்காவில் வாஷிங்டனை தளமாக கொண்டு செயல்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள 38 ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் புலனாய்வு பத்திரிகையாளர்கள் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்தியாவை சேர்ந்த இந்தியன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், பிரிட்டனின் த கார்டியன், பிபிசி, பிரான்ஸின் லே மோன்டே மற்றும் கனடா ஒலிபரப்புக் கழகம் உள்ளிட்ட ஏராளமான முன்னணி ஊடகங்களை சேர்ந்த பத்திரிகையாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
2.5 மில்லியன் ரகசிய பைல்கள் எல்லை தாண்டிய புலனாய்வின் மூலம் விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களை காட்டிலும் 160 மடங்கு அதிகமான ரகசிய கோப்புகளை இந்த பத்திரிகையாளர்கள் திரட்டி உள்ளனர். ஊடகவியலாளர்களின் தீவிர மற்றும் கடுமையான உழைப்பினால், 2.5 மில்லியன் ரகசிய கோப்புகள் மற்றும் 206 க்கும் அதிகமான கணக்குகளின் ரகசிய கம்ப்யூட்டர் டேட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
ரகசிய பண பரிமாற்றங்கள் வெளிநாடு முதலீடுகள், ரகசிய பண பரிமாற்றங்கள் என பல்வேறு தகிடுதத்தங்கள் மூலம் 170 க்கும் அதிகமான நாடுகளில் உள்ள அரசியல்வாதிகள், பெரும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள், தொழில் நிறுவனங்கள், தீவிரவாத அமைப்புகள் செய்த வரி ஏய்ப்புகளை இந்த அமைப்பு கண்டறிந்துள்ளது.
வரி ஏய்ப்பு அம்பலம் அண்மையில் இந்தியா உள்பட உலகம் முழுவதும் 170 க்கும் அதிகமான நாடுகளில் அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள், தனி நபர்கள் செய்த வரி ஏய்ப்பு விவரங்களை இந்த அமைப்பு அம்பலப்படுத்தி உள்ளது.
விஜய் மல்லையா… இந்த வரி ஏய்ப்பு பட்டியலில் இந்தியாவை சேர்ந்த612 பேர் இடம் பெற்றுள்ளனர். அதில் முக்கியமாக தொழிலதிபரும், மாநிலங்களவை எம்.பி.யுமான விஜய் மல்லையா, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை எம்.பி. விவேகானந்த் காதம் மற்றும் ரவிகாந்த் ரூயா, சமிர் மோடி, சேட்டன் பர்மன், அபய் குமார் ஓஷ்வால், ராகுல் மேமன், தேஜா ராஜூ, சவுரப் மிட்டல் மற்றும் வினோத் ஜோஷி உள்ளிட்ட பல்வேறு தொழிலபதிபர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ad

ad