புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2013


மனோ கணேசன் மீது தாக்குதல்!மூவர் காயம்!- பாஸ்க்கரா - குமரகுருபரன் - குகவரதன் கண்டனம்
கொட்டகலை, பத்தனை சந்தியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரான மனோ கணேசன் கலந்து கொண்டபோது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் தோட்டத் தொழிலாளர்களுக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் பெற்றுக்கொடுக்கப்பட்ட சம்பளம் போதாது என்றும் அந்த சம்பள உயர்வை எதிர்த்து கொட்டக்கலையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.
16 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பே இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மலையக மக்கள் முன்னணி, தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் மற்றும் அங்கத்தவர்கள் கலந்துக்கொண்டனர்.
இதேவேளை, இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றுமொரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இரண்டு பிரிவினரும் தங்களுடைய ஆதரவாளர்களை பஸ்களில் ஏற்றிவந்தே எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில். அங்கு பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு எதிரான நடவடிக்கைகளையே முன்னெடுத்ததாக மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் குற்றஞ்சாட்டினர்.
தங்களுடைய ஆதரவானவர்களை பஸ்களில் இருந்து இறங்கவிடாமல் தடுத்ததாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸிற்கு ஆதரவானவர்களை மட்டுமே பஸ்களில் இருந்து இறங்குவதற்கு அனுமதித்ததாகவும் கூட்டமைப்பினர் குற்றஞ்சாட்டினர்.
இந்நிலையிலேயே மலையக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பின் ஆர்ப்பாட்டத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த தாக்குதலிலேயே மனோ கணேசன் காயமடைந்துள்ளார். காயமடைந்த அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பிபிசி செய்தி
இலங்கையில் மலையகத் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி போராட்டம் நடத்த முற்பட்ட 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் மீது சிலர் நடத்திய தாக்குதலில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனர்.
கொட்டகலை நகரில் இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கான அண்மைய சம்பள ஒப்பந்தத்தை எதிர்த்து, 16 தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்த நடவடிக்கை எடுத்திருந்தது.
ஆனால் இந்தக் கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு குழுவொன்று கொட்டகலை நகரில் போராட்டம் நடத்த முனைந்ததாகவும், அந்தக் குழுவினர் தம்மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகவும் தாக்குதலில் காயமடைந்த தான் உள்ளிட்ட மூன்று பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளதாகவும் மனோ கணேசன் கூறினார்.
இதேவேளை, கொட்டகலையில் நடந்த தாக்குதல் காரணமாக தமது போராட்டம் இறுதியில் பத்தனை நகரில் நடத்தப்பட்டதாகவும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மேலும் தெரிவித்தார்.
2ம் இணைப்பு
ஜனநாயக மக்கள் முன்னணித் தலைவர் மீதான தாக்குதல்தறுதலைகளின் செயற்பாட்டுக்குஒப்பானதுபாஸ்க்கரா
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மீதான தாக்குதல் தறுதலைகளின்தலைகால் தெரியாத செயற்பாட்டுக்கு ஒப்பான செயல் என கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி.பாஸ்க்கரா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
எமது மலையக மக்களின் விடிவிற்காக மலையக மக்களின் வாழ்வாதார வளர்ச்சிக்காக கூட்டு ஒப்பந்தசம்பள உயர்வு காணாததை "நெற்றி கண்ணை திறந்தாலும் குற்றம் குற்றமே" என நக்கீரர் சொன்னதுபோல பிழையை பிழை என்று அகிம்சை வழியில் கண்டித்ததற்கு பிழைவிட்டதை ஒத்துக்கொள்ளமுடியாமல்,
வன்முறையில் காட்டிய கோழை அரசியலை எமது கட்சி வன்மையாக கண்டிப்பதுடன்வன்முறைவாதிகளுக்கு மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள் என்பதையும் நாம் காரசாரமாக சுட்டிக்காட்டவிரும்புகின்றோம்.
அதேவேளை உரியவர்களுக்கு உரிய பதில் சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லப்படும் என்பதைதெளிவாக தெரிவிப்பதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் தமது வரலாற்று தவறை உணர கூடிய காலம்செல்லாது என்பதையும் தெட்ட தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றோம்இதற்காக அவர்கள் மக்களின்தீர்ப்பின் பின் இரத்தக் கண்ணீர் வடிக்க வேண்டி வரும் என்பதையும் கூறிவைக்க விரும்புகின்றோம்.
சப்பிரகமுவ கேகாலை மாவட்ட தேர்தல் கூட்டின் மூலம் தமிழ் வேட்பாளர்கள் தெரிவு செய்து வரலாற்றுவெற்றி பெற்ற மக்களுக்கு பிரித்தோடும் சதி அரசியல் வேலை மக்களின் மனங்களில் வேல்பாச்சும்வேலையாக உள்ளது என்பதை கூறிவைப்பதுடன்,
குற்ற மிழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுப்பதை உலகநாடுகள் உற்று நோக்கும்என்பதை அரசுக்கு தெரிவிப்பதுடன் சட்டம் தன் வேலையை சரியாக செய்ய வழிவிடும்படியும்கேட்டுக்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
3ம் இணைப்பு
உடன் பிறப்புக்களையே தாக்கும் கும்பலின் செயல் கேவலமானது! பிரதித் தலைவர் முனைவர்  நல்லையா  குமரகுருபரன் கடுமையான  கண்டனம்
தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு  அரச துதிபாடும் இவர்களின் உடன் பிறப்புக்களையே தாக்கும் கும்பலின் செயல் கேவலமானது.
விலைவாசி, மின்கட்டண உயர்வு, கூட்டு சம்பள உயர்வு  தீர்மானித்ததில் சதி என்பவற்றுக்கு எதிராக  இடம்பெற்ற கூட்டு தொழிற்சங்கங்களின்   ஏற்பாட்டில் இன்று காலை கொட்டகலவில்  இடம்பெற்ற  ஆர்ப்பாட்டம்    மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளமை கண்டிக்கத்தக்கதாகும்.
தொழிலாளர் உரிமைக்காக குரல் கொடுப்பதாக கூறிக்கொண்டு  அரச துதிபாடும் கும்பலின் தாக்குதல்களை மலையாக தமிழ் மக்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள்.
வாழ்க்கை செலவு உயர்வுக்கேற்ப சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க முடியவில்லை. ஜனநாயக ரீதியான அஹிம்சை போராட்டத்தின் மீது  தாக்குதல் நடத்தி அரசிடம் சன்மானம் , பாரட்டு பெறுவதற்காகவா  இத்தாக்குதல் என ஜ ம மு பிரதித் தலைவர் குமரகுருபரன் கண்டித்துள்ளார்.
4ம் இணைப்பு
தாக்குதலில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கூண்டில் நிறுத்துங்கள்!- சண். குகவரதன் கண்டனம்
அப்பாவி தோட்டப்புற மக்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களின் நியாயமான அடிப்படை உரிமையைக் கேட்டு கொட்டகலையில் இன்று நடைபெறவிருந்த தொழிற்சங்க ஆர்ப்பாட்டத்தில் எமது கட்சியின் தலைவர் மனோ கணேசன் மீதும் எமது ஆதரவாளர்கள், தொழிற் சங்கத்தினர் மீதும்   மேற்கொள்ளப்பட்ட காட்டுமிரண்டித் தனமான தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக சண். குகவரதன் தெரிவித்துள்ளார்.
சொந்த நாட்டில் சொந்த உரிமையயை கதைக்க விடாது, ஊடகத் துறைக்கு அச்சுறுதல் விடுத்து வந்த நிலையில், இன்று அரசாங்கத்துக்கு சோரம் போகாமல் தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் எமது தலைவர் மீதான இந்தத் தாக்குதலை உலகத் தமிழ் மக்கள் திரும்பிப் பார்க்க வேண்டும்.
இதற்கு அரசாங்கம் என்ன பதில் கூற விரும்புகின்றது?. இது ஒரு திட்டமிட்ட, இலங்கை தொழிலாளர் காங்கிஸினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகும். 
தமிழ் பேசும் மக்களுக்காக தலைநகரில் இருந்து தன்மானத் தமிழனாகக் குரல் கொடுக்கும் எமது தலைவர் மீதான தாக்குதல் ஒரு காட்டுமிராண்டித் தனமான செயல்.
மக்கள் மத்தியில் வாக்குகளைப் பெற்ற எந்தவொரு அரசியல்வாதியும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு பின் நிற்க மாட்டார்கள். உடனடியாக இத் தாக்குதலில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கூண்டில் நிறுத்துங்கள்.
தொடர்ந்தும் எல்லாக் காலத்திலும் மக்கள் பொறுமையாக இருப்பார்கள் என்று சம்பந்தப்பட்டவர்கள் நினைக்க வேண்டாம்.
மக்களே தகுந்த நேரத்தில் சரியான பாடம் புகட்டுவார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணியின் உப பொதுச் செயலாளரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான சண். குகவரதன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ad

ad