புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 ஏப்., 2013


முள்ளிவளையில் தமிழ் மக்களின் வீடுகள் தீக்கிரை: அமைச்சர் றிசாட்டின் அடியாட்கள் அடாவடித்தனம்
முள்ளிவளை மத்தியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்த தமிழ் மக்களின் வீடுகளை தீக்கிரையாக்கி அமைச்சர் றிசாட் தன்னுடைய கோரத்தாண்டவத்தை இன்று அதிகாலை ஆடியுள்ள நிலையில், முள்ளியவளையிலிருந்து தமிழர்களை விரட்டியடிக்கும் அரசாங்கத்தின் உள்நோக்கம் வெளிப்பட்டிருக்கின்றது.
முள்ளியவளை பகுதியில் 540ஏக்கர் காட்டை அழித்து முஸ்லிம் மக்களை குடியேற்ற அமைச்சர் றிசாட் கடும் பிரயத்தனம் எடுத்திருந்த நிலையில், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த தமிழ் மக்கள் நீதிமன்றிலும் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் 10 பேர் கொண்ட குழுவினர் குறித்த பகுதிக்குள் நுழைந்து 4 பொதுமக்களின் அரை நிரந்தர வீடுகளையும், சொத்துக்களையும் எரித்து தீக்கிரையாக்கியுள்ளனர்.
இதனுடன் நின்றுவிடாது, அங்கிருந்த ஏனைய மக்களின் வீடுகளையும் எரித்து தீக்கிரையாக்க அவர்கள் முற்பட்டுள்ளனர்.
காடழிப்பு தொடர்பாக இரு இனங்களுக்கிடையில் அண்மையில் முறுகல் நிலை ஏற்பட்ட பகுதியில் அமைந்துள்ள நான்கு குடிசைகளே இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளது.
இதனால் அக் குடிசையில் இருந்த உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளன. சம்பவம் இடம்பெற்ற வேளை இவ் வீடுகளில் இருந்தவர்கள் தேவைகளின் பொருட்டு வேறு இடங்களுக்கு சென்றிருந்ததனால் உயிர்ச்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.
திருமதி செந்தூரன் நிலோஜனா என்ற 27 வயதுடைய இரு பிள்ளைகளின் விதவைத்தாயின் குடிசையும் திருமதி தங்கமணி, திருமதி சுரேஸ்குமார் சுமங்கலி, செல்லத்தம்பி முகுந்தன் ஆகியோரது வீடுகளுமே இனந்தெரியாதோரால் எரிக்கப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனினும் மக்கள் உஷாரடைந்து அமைச்சரின் அடியாட்களை எதிர்க்க முற்பட்ட நிலையில் அவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய முற்பட்டவேளை, இதற்கும் அமைச்சருக்கும் தொடர்பில்லை என்ற பாணியில் பொலிஸார் குறித்த சம்பவத்தை திசைதிருப்ப முயற்சிப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் முல்லைத்தீவு முள்ளியவளை கிராமமே கொதிப்பிலும், விரக்தியிலும் ஆழ்ந்துள்ளது.
முள்ளியவளையில் வீடுகள் தீவைப்பு
முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மத்தி என்ற கிராமப் பகுதியில் மீள்குடியேறியுள்ள தமிழ்க் குடும்பங்களின் நான்கு குடிசைகள் நேற்று சனிக்கிழமை நள்ளிரவு தீயிடப்பட்டிருப்பதாக ஊர்மக்கள் தெரிவித்திருக்கின்றனர்.
இரவு ஒரு மணியளவில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிர்ச்சேதமோ காயமோ எற்பட்டதாகத் தெரிவிக்கப்படவில்லை.
முள்ளியவளை மத்தி என்ற கிராமப் பகுதியில் தமிழ்க் குடும்பங்கள் மீள்குடியேறியுள்ள பிரதேசத்தில் முல்லைத்தீவுக்கான பிரதான வீதியோரத்தில், இராணுவத்தினர் தமக்கு முகாம் அமைப்பதற்காக காணி தேவையெனக் கூறி அங்கிருந்தவர்களை வெளியேறுமாறு கோரியிருந்ததாகவும், அதற்கு அந்த மக்கள் உடன்பட மறுத்திருந்தனர் என்றும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம் குடும்பங்களுக்கு இந்த இடத்தையும் இதனையொட்டி காடாக இருக்கின்ற காணிகளையும் வழங்குவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டது, அதனையும் அந்த மக்கள் எதிர்த்து போராடியிருந்தனர்.
இதனையடுத்து, இந்த மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு அப்பால் நூற்றுக்கணக்கான ஏக்கர் காணிகளைத் துப்பரவு செய்யும் பணிகள் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இவ்வாறு காடுகள் அழிக்கப்படுகின்ற எல்லைக்கு அருகில் உள்ள 4 குடிசைகளே சனியிரவு அடையாளம் தெரியாதவர்களினால் தீயிடப்பட்டிருக்கின்றன.
இரவு ஒரு மணிபோல நெருப்பு எரிந்த வெளிச்சத்தைக் கண்டு வெளியில் வந்து பார்த்தபோது, நான்கு குடிசைகள் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டதாக நேரில் கண்ட அயல் காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார் இது குறித்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
3ம் இணைப்பு
முள்ளியவளையில் தறப்பாள் கொட்டகைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுக்களின் இணையம்  வன்மையாகக் கண்டிக்கின்றது.
மிகப் பெரும் துன்பக் கடலைக் கடத்து மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியிருக்க வந்துள்ள வன்னி மக்கள் மீது மீண்டும் ஓர் அவல நிலைக்கு அழைத்துச் செல்வதான செயற்பாடுகள் வன்னியில் தற்போது நடைபெறத் தொடங்கியுள்ளன.
இவ்வாறனதொரு மிலேச்சத்தனமான செயற்பாடு இனவாதிகளின் எடுபிடிகளாகச் செயற்படும் கும்பல்களால் முள்ளியவளையில் மக்கள் குடியிருப்புகள் மீது நேற்று அதிகாலை வேளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீள்குடியேறி இன்னமும் நிரந்தர வீடுகளில் குடியேறாத கிராம மக்களின் தற்காலிக தறப்பாள் கொட்டகைகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
துன்பத் தீயிலிருந்து இன்னமும் முழுமையாக மீளமுடியாது துன்பச் சுமைகளுடன் வாழும் இம்மக்களின் குடியிருப்புகள் மீதான மிலேச்சத்தனமான இத்தாக்குதலை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த பிரஜைகள் குழுக்கள் வன்மையாகக் கண்டிக்கின்றன.
பெரும் சொத்திழப்புக்களுடன் நீண்டதொரு துன்பியல் வாழ்விலிருந்து தற்போது மீண்டுடெழுந்து வரும் வன்னி மக்கள் மீது அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளைச் சிதைக்கும் வகையில் பல செயற்பாடுகள் திரைமறைவிலும் சில இடங்களில் வெளிப்படையாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. மீள்குடியேறி இன்னமும் சகஜ வாழ்வுக்கு திரும்பிக்கொள்ளாத இம்மக்கள் மீது மேலும் மேலும் ஒடுக்குமுறையிலான அடாவடித்தனங்கள் நடதந்தேறி வருகின்றன.
இவ்வாறான ஒடுக்குமுறைகளின் மூலம் இப்பகுதி மக்களை பயப்பீதிக்குள்ளாக்கி அவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தவகையிலேயே முள்ளியவளையில் மக்கள் குடியிருப்புகள் மீதான தீ வைப்பும் நடந்தேறியுள்ளது.
இனமுறுகலையும் துன்பத்தில் துவண்டிருக்கும் வன்னி மக்களின் வாழ்க்கையில் மேலும் இன்னல்களையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய குரோதச் செயல்கள் இந்நாட்டில் தமிழ் இன மக்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
எனவே மீண்டும் ஒரு வசந்த கால வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கனவுகளுடன் தமது இரண்டாவது வாழ்க்கையை வாழத் தொடங்கும் வன்னி மக்கள் மீது இவ்வாறான இன ஒடுக்கு முறைத் தாக்குதல்களை மேற்கொள்வோரை அரசாங்கம் விரைவில் இனங்காண வேண்டும். அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இன நல்லிணக்கத்துடன் வாழ விரும்பும் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க எண்ணும் புல்லுருவிகளை அரசாங்கம் வளரவிடாது அழிக்க வேண்டும்.   
3ம் இணைப்பு
முள்ளியவளையில் தறப்பாள் கொட்டகைகள் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மாவட்ட பிரஜைகள் குழுக்களின் இணையம் வன்மையாகக் கண்டிக்கின்றது.
மிகப் பெரும் துன்பக் கடலைக் கடத்து மீண்டும் தமது இருப்பிடங்களில் குடியிருக்க வந்துள்ள வன்னி மக்கள் மீது மீண்டும் ஓர் அவல நிலைக்கு அழைத்துச் செல்வதான செயற்பாடுகள் வன்னியில் தற்போது நடைபெறத் தொடங்கியுள்ளன.
இவ்வாறனதொரு மிலேச்சத்தனமான செயற்பாடு இனவாதிகளின் எடுபிடிகளாகச் செயற்படும் கும்பல்களால் முள்ளியவளையில் மக்கள் குடியிருப்புகள் மீது நேற்று அதிகாலை வேளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மீள்குடியேறி இன்னமும் நிரந்தர வீடுகளில் குடியேறாத கிராம மக்களின் தற்காலிக தறப்பாள் கொட்டகைகளே தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
துன்பத் தீயிலிருந்து இன்னமும் முழுமையாக மீளமுடியாது துன்பச் சுமைகளுடன் வாழும் இம்மக்களின் குடியிருப்புகள் மீதான மிலேச்சத்தனமான இத்தாக்குதலை மன்னார், வவுனியா, முல்லைத்தீவு பிரதேசங்களைச் சேர்ந்த பிரஜைகள் குழுக்கள் வன்மையாகக் கண்டிக்கின்றன.
பெரும் சொத்திழப்புக்களுடன் நீண்டதொரு துன்பியல் வாழ்விலிருந்து தற்போது மீண்டுடெழுந்து வரும் வன்னி மக்கள் மீது அவர்களின் அடிப்படை வாழ்வுரிமைகளைச் சிதைக்கும் வகையில் பல செயற்பாடுகள் திரைமறைவிலும் சில இடங்களில் வெளிப்படையாகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
மீள்குடியேறி இன்னமும் சகஜ வாழ்வுக்கு திரும்பிக்கொள்ளாத இம்மக்கள் மீது மேலும் மேலும் ஒடுக்குமுறையிலான அடாவடித்தனங்கள் நடதந்தேறி வருகின்றன.
இவ்வாறான ஒடுக்குமுறைகளின் மூலம் இப்பகுதி மக்களை பய பீதிக்குள்ளாக்கி அவர்களின் கருத்துச் சுதந்திரத்தையும் அடக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தவகையிலேயே முள்ளியவளையில் மக்கள் குடியிருப்புகள் மீதான தீ வைப்பும் நடந்தேறியுள்ளது. இனமுறுகலையும் துன்பத்தில் துவண்டிருக்கும் வன்னி மக்களின் வாழ்க்கையில் மேலும் இன்னல்களையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தும் வகையிலான இத்தகைய குரோதச் செயல்கள் இந்நாட்டில் தமிழ் இன மக்களின் எதிர்கால வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் என்பதில் எந்தவித ஐயமுமில்லை.
எனவே மீண்டும் ஒரு வசந்த கால வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கனவுகளுடன் தமது இரண்டாவது வாழ்க்கையை வாழத் தொடங்கும் வன்னி மக்கள் மீது இவ்வாறான இன ஒடுக்கு முறைத் தாக்குதல்களை மேற்கொள்வோரை அரசாங்கம் விரைவில் இனங்காண வேண்டும்.
அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இன நல்லிணக்கத்துடன் வாழ விரும்பும் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க எண்ணும் புல்லுருவிகளை அரசாங்கம் வளரவிடாது அழிக்க வேண்டும்.

ad

ad