புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2013

மாவீரர் மேஜர் கணேஷ்சின் மனைவி கொழும்பு கட்டுநாயக்க விமானநிலையத்தில் புலனாய்வுத்துறையினரால் கைது
 தமிழ் நாட்டின் திருச்சியில் பயத்தின் காரணமாக கடந்த மூன்று வருடங்களாக தனது இரண்டு பிள்ளைகளுடன் கோவர்ஜன் 10, நிதுர்சன் 7
தங்கியிருந்த ஜெயந்தினி 33 வயது. கைது செயப்பட்டுள்ளார் நிலைமை சீர்டைந்ததாக கூறப்பட்ட செய்திகளை நம்பி தனது சொந்த ஊருக்கு திரும்பிய வேளையில் ஞாயிறுக்கிழமை 28.04.2013 அன்று அதிகாலை தனது பிள்ளைகள் இரண்டும் , உறவினர்கள் இருவர், நண்பர் ஒருவர் இவர்களுடன் திருச்சி விமான நிலையத்திலிருந்து வந்த விமானத்தில் கட்டுநாயக்க விமானநிலையம் வந்தடைந்தார். விமான நிலையத்தில் வைத்து ஒரு வானை வாடகைக்கு பிடித்துக்கொண்டு தங்களுடன் வந்த நண்பர் ஒருவரின் கொழும்பில் உள்ள வீட்டை சென்றடைந்த போது ஒரு வேனில் வந்த புலனாய்வுத்துறையினர் இவர்கள் அனைவரையும் அழைத்துசென்றனர். 30.04.2013 செவ்வாக்கிழமை அன்று பிள்ளைகள் இருவரையும், உறவினர் இருவருடன் விடுவித்தனர், அத்துடன் நண்பரையும் விடுவித்துள்ளனர். ஆனால் ஜெயந்தினி தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் மட்டக்களப்பு கோயில்போரதீவை சேர்ந்தவர். இவரின் கணவர் ஒரு மாவீரர் மேஜர் கணேஷ் (35 கிராமம், பாலையடிவட்டை). பிள்ளைகள் உறவினரிடம் ஒப்படைக்கும் போது பிள்ளைகளை வாரத்தில் ஒருதடவை தாயை பார்வை இடுவதற்கு அனுமதிப்பதாக கூறியுள்ளனர்

ad

ad