புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மே, 2013


அவுஸ்திரேலியாவிலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளார்கள் பலவந்தமாக நாடு கடத்தப்பட்டுள்ளனர்


அவுஸ்திரேலியாலிருந்து 819 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் பலவந்தமான முறையில் நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் திகதி
முதல் இதுவரையில் 1029 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

புலம்பெயர் தமிழர்களின் ஒத்துழைப்புடன் அதிக எண்ணிக்கையிலானவர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.போலியான முறையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் பிரவேசிப்போரை நாடு கடத்த தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
போலி புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு புலம்பெயர் தமிழர்களின் வலுவான ஆதரவு காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எவ்வாறெனினும், அரசாங்கத்தின் குடிவரவுக் கொள்கைகளில் அழுத்தங்களை ஏற்படுத்த முடியாது என அவுஸ்திரேலியா சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்வோரை தடுக்க தீவிர கண்காணி;ப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
2012 ஜனவரி மாதம் முதல் 2013 ஏப்ரல் மாதம் வரையில் சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 3286 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ad

ad