புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013

சரணடைந்த புலிகளின் முக்கிய போராளிகள் குடும்பங்களை இராணுவம் வைத்திருக்கும் விடயம் அம்பலம்!- சிறிதரன்
இலங்கை அரச படைகளிடம் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் பின்னர் சரணடைந்த விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகள் மற்றும் தளபதிகளின் குடும்பங்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் இராணுவம் வைத்திருக்கும் விடயம் அம்பலத்திற்கு வந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் குடும்பத்தினர் நேற்று பலத்த பாதுகாப்புடன் கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு பாடசாலை விடுகைப் பத்திரம் பெறுவதற்காக அழைத்து வரப்பட்டமை இதற்கு சிறந்த உதாரணமாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
மேற்படி விடயம் தொடர்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
நேற்று (திங்கள்) கிளிநொச்சி மகாவித்தியாலயத்திற்கு சு.ப.தமிழ்ச் செல்வனின் மனைவி மற்றும் அவரது பிள்ளை ஆகியோர் இரகசிய பாதுகாப்புடன் பாடசாலை விடுகைப் பத்திரம் பெறுவதற்கான அழைத்து வரப்பட்டிருக்கின்றனர்.
மேலும் தமிழ்ச் செல்வனின் பிள்ளைகளுக்கு விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் பெயர் வைத்திருந்த நிலையில் அவற்றை மாற்றி வேறு பெயர் வைப்பதற்கும் நடவடிக்கை டுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
எனவே குறித்த பிள்ளை கடந்த 4 வருடங்களாக பாடசாலை கல்வியை தொடரவில்லையென்பது தெரிகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது விடுதலைப் புலிகளின் முக்கிய போராளிகளினதும், அவர்களது தளபதிகளினதும் குடும்பங்கள் தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும் எனவும், யுத்தத்தின் பின்னர் அவர்கள் சமூகத்தில் சுதந்திரமாக வாழ அனுமதிக்க வேண்டும் எனவும் நான் பாராளுமன்றில் கேட்டிருந்தேன்.
எனினும் அப்போது மௌனமாக இருந்த இலங்கை அரசாங்கம் அவர்களை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் எங்கோ மறைத்து வைத்திருக்கும் விடயம் இப்போது அம்பலத்திற்கு வந்துள்ளது.
நேற்று வெளியே வந்த தமிழ்ச் செல்வனின் குடும்பத்தைப் போன்றே ஏனைய தளபதிகளினதும் குடும்பங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.
எனவே அவர்களை மீளவும் இந்த சமூகத்துடன் இணைத்து, அவர்கள் சுமுகமாகவும், சுதந்திரமாகவும் வாழ அனுமதிப்பதன் மூலம் இலங்கை அரசாங்கம் தனது நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும். வெறுமனே யுத்தம் நிறைவடைந்து விட்டதாகவும், பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டதாகவும் கூறிக் கொண்டிருப்பதில் பயனில்லை.
மேலும் இந்த விடயத்தில் சர்வதேச நாடுகளும், மனிதவுரிமை அமைப்புக்களும் கூட தலையிட்டு போராளிகளின் குடும்பங்களாக இருப்பினும், யுத்தத்தில் ஈடுபடாமல், சாதாரண வாழ்வை வாழ்ந்து கொண்டிருந்த இவர்களை விடுவித்து சமூகத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் கேட்டுள்ளார்.

ad

ad