புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 மே, 2013

சுவிஸ் நாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" இல் தலைமன்னாரை வந்தடைந்தனர்
இந்தியாவில் இருந்து வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் 4 பேர் 'கைட் போட்" ஐ பயன்படுத்தி கடல் மார்க்கமாக முதல் முறையாக இன்று செவ்வாய்க்கிழமை மதியம் தலைமன்னார் கடற்பரப்பை வந்தடைந்துள்ளனர்.
சுவிற்சர்லாந்தைச் சேர்ந்த குறித்த நான்கு பேரும் இந்தியாவிற்குச் சென்ற நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் இந்தியா தனுஸ்கோடி கடற்கரையில் இருந்து 'கைட் போட்" ஐ பயன்படுத்தி தலைமன்னாரை நோக்கி தமது பயணத்தை ஆரம்பித்தனர்.
இவர்களுடைய கடல் மார்க்கமான பயணத்திற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதியை வழங்கி இருந்தது.
இன்று மதியம் 12.30 மணியளவில் தலைமன்னார் கடற்கரையை வந்தடைந்த இவர்கள் தலைமன்னாருக்கு வருவதற்கான சகல ஏற்பாடுகளையும் எழிமன்ஸ் அமைப்பின் முகாமையாளர் ஜெரோம் பெனாண்டஸ் மேற்கொண்டிருந்தார்.
இவர்களுடைய வருகையை பதிவு செய்யது விசாரனைகளை மேற்கொள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி எஸ்.யசோதன், சுங்கத்திணைக்கள அதிகாரிகளான என்.எஸ்.குமார நாயக்க, என்.வீரசிங்க ஆகியோர் தலைமன்னார் கடற்கரைக்குச் சமுகமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad