புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 மே, 2013

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவரை இந்திய காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நைரேபிக்கான விமானத்தில் பயணம் செய்ய முயற்சித்த போது குறித்த நபரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலத்திரனியல் பொறியியலாளரான குறித்த நபர் வான் வழியாக இந்தியாவை அடைந்ததாக முதலில் தெரிவித்துள்ளார்.
எனினும், நீண்ட விசாரணைகளின் பின்னர் கடல் வழியாக தாம் இந்தியாவை அடைந்ததாகவும், நைரோபிக்கு செல்ல திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் குறித்த நபருக்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து உத்தரவினை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 35 வயதான தேவ சதீஸ் குமார் எனபவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மும்பை விமான நிலையத்தில் வைத்து குறித் நபரை இந்திய புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ad

ad