புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2013

மாரடோனாவின் சாதனையை முறிடியத்தார் மெஸ்சி

அர்ஜென்டினாவின் முன்னணி கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி, முன்னாள் நட்சத்திர வீரர் மாரடோனாவின் கோல் சாதனையை முறியடித்துள்ளார்.
அர்ஜென்டினா தேசிய அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள மாரடோனா, 34 கோல்கள் அடித்திருந்தார்.
நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் கவுதமாலா அணியை அர்ஜென்டினா அணி 4-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது. இப்போட்டியில் மெஸ்சி ஹாட்ரிக் கோல்கள் அடித்து, தனது கோல்கள் எண்ணிக்கையை 35 ஆக அதிகரித்ததன் மூலம் மாரடோனாவின் சாதனையை முறியடித்துள்ளார்.
மேலும் ஹெர்மன் கிரெஸ்போவின் கோல் சாதனையை சமன் செய்துள்ள மெஸ்சி, முன்னாள் வீரர் கேபிரியேல் பாட்டிஸ்டுடாவை விட 21 கோல்கள் பின்தங்கியுள்ளார். மாரடோனாவைவிட மெஸ்சி சிறந்த வீரர் என்று ரசிகர்கள் பெரும்பாலும் கூறி வருகின்றனர். அதனை நிரூபித்துள்ள மெஸ்சி, அதிக கோல்கள் அடித்த அர்ஜென்டினா வீரர்களில் இப்போது 3-வது இடத்தில் இருக்கிறார்.
தற்போதைய வீரர்களில் அவருக்கு போட்டியாக கோல் அடிக்க ஒருவரும் இல்லை. மெஸ்சிக்கு இப்போது 25 வயதுதான் ஆகிறது. எனவே, தனது நாட்டின் அதிக கோல் அடித்த வீரர் என்ற நிலையை அவர் எட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad