புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2013



          றாவது எம்.எல்.ஏ.வாக தே.மு.தி.க.வி லிருந்து அ.தி.மு.க. பக்கம் சாய்ந்திருக்கிறார் சேந்தமங்கலம் சாந்தி. முந்தைய 5 எம்.எல்.ஏ.க் களும் என்ன சொன்னார்களோ
nakeeranஅதுபோலவே சாந்தியும், "எனது தொகுதி மக்களின் கோரிக்கை களுக்காக முதல்வரை சந்தித்தேன். அரசின் மக் கள் நலத்திட்டங்கள் என் தொகுதிக்கு கிடைக்க வேண்டும். தொகுதி வளர்ச்சி பற்றி முதல்வ ரிடம் பேசுவதற்கு கட்சியின் அனுமதி தேவை யில்லை' என்று மே 29-ந் தேதி கோட்டையில் ஜெ.வை சந்தித்துவிட்டுத் திரும்பிய சாந்தியும் பேட்டி கொடுத்தார். அதற்கு மேல், அவர் ஊடகங்களிடம் பெரிதாக எதுவும் பேசவில்லை.

ஆரம்பத்தில் அ.தி.மு.கவில் இருந்தவர் தான் சாந்தி. 2005-ல் தே.மு.தி.க தொடங்கப் பட்டபோது அதில் சேர்ந்தார். 2006 சட்டமன் றத் தேர்தலில் தே.மு.தி.க. சார்பில் நின்று தோற் றார். 2011-ல் ஜெயித்தார். 2013-ல்  ஜெ.வை சந்தித்து அ.தி.மு.க விசுவாசியாகத் தன்னை வெளிப் படுத்தியிருக்கிறார். எதிர்க்கட்சி அந்தஸ்து தே.மு.தி.க.வுக்கு நீடிக்குமா, இன்னும் எத்தனை எம்.எல்.ஏ.க்கள் ஜெ. விசுவாசிகளாக மாறப் போகிறார்கள் என்று அரசியல் வட்டாரங்கள் பரபரப்படைந்திருக்கும் நிலையில், தே.மு.தி.க. வின் கொ.ப.செ.வும் சட்டமன்றக் கொறடாவு மான சந்திரகுமார் எம்.எல்.ஏ.வை சந்தித்தோம்.

""அரசியலில் பெண்களின் பங்கு கூடுத லாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் எந்த முகவரியும் இல்லாமல்  ஒரு கிராமத்தில்  ஜெராக்ஸ் கடை வைத்திருந்த சாந்திக்கு 2006-லும் 2011-லும் சீட் கொடுத்தார் கேப்டன். அவரால் சட்டமன்றத்திற்கு அனுப்பப்பட்ட சாந்திதான் இப்போது அ.தி.மு.க.விடம் விலை போயிருக்கிறார். அவர் அ.தி.மு.க.வுடன் தொடர்பில் இருக்கிறார் என நக்கீரனும் அம் பலப்படுத்தியிருக்கிறது. மைக்கேல் ராயப்பனும் தொடர்பு கொண்டிருந்தார் என்பதும் தெரியும். அதனால் எங்களுக்கோ கேப்டனுக்கோ எந்த அதிர்ச்சியும் இல்லை. 

இதே சாந்தி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் கோரிக்கை பற்றி மூன்று முறை சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். அதை யெல்லாம் ஜெ. தீர்த்து வைத்துவிட்டாரா? அவர் எப்படி தொகுதி மக்களின் கோரிக்கை களை நிறைவேற்றி வைப்பார்? சட்டமன்றத்தில் ஜெ. தன்னைப் பார்த்து முறைப்பதாகக் கூறி அவரைத் தனிப்பட்ட முறையில் எங்களிடம் விமர்சித்தவர்தான் இந்த சாந்தி. இப்போது 5 கோடி அவருக்கு விலை பேசப்பட்டதால், அங்கு சென்றிருக்கிறார். இதில் அமைச்சர் தங்கமணி தான் அதிகம் செலவு  செய்தாராம். எங்களைப் பொறுத்தவரை, கட்சியில் உள்ள அழுக்குகள் கழுவப்படுகின்றன''’என்றார்  சந்திரகுமார் சூடாக.

நீண்ட முயற்சிக்குப் பின் சாந்தியை தொடர்பு கொண்டோம். ""சட்டமன்றத்தில் நீங்கள் முன்வைத்த கோரிக்கைகளே நிறை வேறாத நிலையில் ஜெ.விடம் நேரில் கோரிக்கை வைத்திருக்கிறீர்களே?'' என்றதும், ""உடனடியாக எல்லா நடவடிக்கையையும் எடுத்திட முடியுமா? கால அவகாசம் தேவைப்படத்தானே செய்யும்'' என்றவரிடம், "ஜெ.வை விமர்சிச்சீங்களாமே?' என்றதும், ""அப்படியெல்லாம் இல்லை'' என்ற துடன், ""என்னை தே.மு.தி.க.விலிருந்து இன்னும் விலக்கவில்லை'' என் றார். 5 கோடி ரூபாய்க்கு விலை பேசப்பட்ட தாக... என நாம் சொல்லத் தொடங் கியதுமே, போனை கட் செய்து விட்டார் சேந்த மங்கலம் சாந்தி.

ad

ad