புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 ஜூன், 2013



               நால்வர் அணியில் ஓ.பி.எஸ். லட்சணத்தை சென்ற இதழில் பார்த்தோம். மற்ற மூவர்களில் முதன்மையானவர் நத்தம் விஸ்வநாதன்.
 nakeran

கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களிடம் விசாரித்தபோது, ""இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு அப்பாவித் தோற்றம் காட்டும் நத்தம், தொழிலில் கில்லாடி. புளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் ஆள். தமிழ்நாடு தாண்டி கர்நாடகா, ஆந்திரான்னு பல மாநிலங்களில் ஏக்கர் ஏக்கரா புளியமரங்கள் வைத்திருக்கிறார். அதனால் அந்த பிஸ்னஸில் கொடிகட்டிப் பறக்கிறார். லோக் கலில் இவர் மைத்துனர் கண்ணன்தான் மந்திரி. அவர்தான் பவராக கோலோச்சுகிறார். நத்தமோ இந்தோனேஷியாவில் நிலக்கரி சுரங்கங்களையும் வாங்கிப்போட்டு ஜாம் ஜாம்ன்னு தொழில் பண்றார். அந்தச் சுரங்கங்களில் எடுக்கப்படும் நிலக்கரி வகையறாக்களை இந்திய அரசுக்குச் சொந்தமான தேசிய அனல்மின் நிலைய வாரியத்துக்கு சப்ளை பண்ணிக்கிட்டிருக்கார். இந்த விசயமே இப்பதான் கார்டனுக்குத் தெரியவந்திருக்கு. அதுவும் எப்படி தெரியவந்தது தெரியுமா? அது ஒரு கதை''’என்றவர்கள் அந்தக் கதையையும் இப்படி விவரித்தனர்...

""தமிழக மின் உற்பத்தி ஆலைகளில், அடிக்கடி எந்திரக் கோளாறு வருவதால், பழுதாகும் எந்திரங் களை எல்லாம் புதுசா மாற்ற 5 ஆயிரம் கோடியை ஒதுக்கிய ஜெ., அதற்கான உரிமத்தை ஜெர்மனி கம்பெனி ஒன்றிற்குக் கொடுத்தார். அந்த ஜெர்மானியக் கம்பெனியின் இந்தோனேசிய ஏஜண்ட் ஒருவரை, மேட்டூர் அனல்மின் நிலையத்தில் பழுதான ஒரு முக்கிய எந்திரத்தை மாற்றுவது தொடர்பாக சந்திக்க அழைத்தார் ஜெ.’கர்நாடக அனல்மின் நிலையம் ஒன்றிற்காக சப்ளையான ஒரு எந்திரத்தை மேட்டூரில் பொருத்தலாமான்னு அப்ப அவர் ஆலோசித்தார். 

அப்பதான் அந்த இந்தோனேஷியப் பிரதிநிதி, நத்தத்துக்கு இந்தோனேஷியாவில் இருக்கும் நிலக்கரி சுரங்கங்கள் பத்தியும், அதனால் அவருக்கு அங்கு இருக்கும் செல்வாக்கு பத்தியும் சொல்லி, அப்படிப்பட்ட நத்தம் விசுவநாதனுக்கு, அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எந்திரங் களை சப்ளை செய்யும் கம்பெனிகளோட  நல்ல நெருக்கம் இருக்குன்னு சொன்னார். உடனே நத்தத்தைக் கூப்பிட்டு இது பற்றி விசாரித்த ஜெ.,’800 கோடி மதிப்பிலான அந்த எந்திரங் களை, நத்தத்தின் மூலம் 750 கோடிக்கு சப்ளை பண்ணவைத்து, மேட்டூர் புதிய அனல்மின் நிலையத்தில் கடந்த மாதம் பொருத்த வைத்தார். இந்த சுரங்க ரகசியம் தெரிந்ததால்  இறக்குமதியில் தனியாக  5 சதவீதம் நட்டம்''’என்றார்கள் புன்னகையோடு.



கோட்டை வட்டாரத்தில் விசாரித்தபோது ""நத்தத்திற்கு மின்சாதனக் கம்பெனிகளுடன் இருக்கும் நட்பைப் பார்த்த கார்டன், மின் உற்பத்தி செயல்பாடுகளை அவரிடமிருந்து பறித்துவிட்டது. எனவே மின் உற்பத்தி விவகாரங் களை கவனிக்க 2 தனியார் கன்சல்டிங் நிறுவனங் கள் நியமிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே தி.மு.க. ஆட்சியில் வாங்கப்பட்ட எந்திரங்களை நத்தம் விசுவநாதன் மாற்றியிருக்கிறார். இதிலும் அவ ருக்கு ஏகப்பட்ட பலன். இதேபோல் டாஸ்மாக் கடைகளுக்கு சரக்குகளை கொண்டுபோய் சப்ளை செய்யும் லோடு லாரிகள் வகையிலும் பார் டெண்டர் வகையிலும், மதுபான ஆலைகளிடம் மார்க்கெட்டிங் செய்வதிலும் அவர் காட்டில் அடைமழை பெய்கிறது''’என்கிறார்கள்.  

கட்சிக்குள் நத்தத்தின் செயல்பாடுகள் எப்படி?

வத்தலகுண்டு ர.ர.க்கள் நம்மிடம், ""அமைச்சர் நத்தம் விசுவநாதனுக்கு கட்சியைப் பத்தி கவலையே கிடையாது. நம்ம பதவியும் வருமான மும் சரியா இருந்தாப் போதும்ங்கிறது அவர் நினைப்பு. புளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே முதல் நபரா இருக்கும் நத்தம், கட்சிப் பிரச்சினைகளை கவனிக்கமாட்டார். வத்தலகுண்டு சேர்மனாவும், ஒ.செ.வாகவும் இருந்த மோகன், கூட்டுறவு பதவிகளையும், சத்துணவு போஸ்டிங்கு களையும் வித்தார். இது சம்பந்தமா மந்திரி நத்தத்துக்கிட்ட புகார் சொல்லியும் அவர் கண்டுக் கலை. அதனால் 12 ஊராட்சி கிளைச்செயலாளர் கள் தலைமையில் கடந்த 16-ந் தேதி கார்டனுக்குப் போய் புகார் கொடுத்தோம். அதன் அடிப்படை யில் மோகனின் ஒ.செ.பதவியை தலைமை பறிச்சிடிச்சி. அந்தப் பதவியில் ஆக்டிவ்வான ஒருத்தரைப் போடுங்கன்னு மந்திரிகிட்ட சொன் னோம். அவரோ தி.மு.க. மாஜி ஐ.பெரியசாமி இருக்காரே, அவரோட அண்ணன் மகன் பாண்டியை ஒ.செ.வா ஆக்கிட்டார். இவர்மேல் ஏற்கனவே நில அபகரிப்பு வழக்கெல்லாம் இருக்கு. இப்படிப்பட்டவரை தூக்கிப்பிடிக்கிறார் மந்திரி''’என்றார்கள் காட்டமாய்.

பழனி ஒன்றியத்தை சேர்ந்த ர.ரக்களோ, ""எங்க யூனியன் சேர்மன்  செல்லச்சாமி இருக்காரே சிமெண்ட் ரோடு போடாமலே ரோடு போட்டதா சொல்லி பணம் எடுத்துக் கறார். நிறைய கோல்மால் பண்றார். அதுமட்டுமல்ல; இலவச மிக்ஸி, கிரைண்டர், பேன்களை வழங்கியது போக 87 பொருட்களை சமுதாய மண்ட பத்தில் அதிகாரிங்க வச்சிருந்தாங்க. அதை சேர்மனின் ஆட்களான மௌனகுரு, ராமகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோர் திருடிக்கிட்டுப் போய்ட்டாங்க. இதையெல்லாம் மா.செ.வான மந்திரிக்கிட்ட சொல்லியும் பார்த்துக்கலாம் போங்கய்யான்னு அலட்சியமாச் சொல்றார். கட்சிக்கு கெட்டபெயர் வர்றதைப் பத்தி யெல்லாம் அவருக்கு கவலையில்லை''’என்றார்கள் ஆவேசமாய். 

நால்வர் அணியில் அமைச்சர் வைத்திலிங்க மாவது தேறுவாரா?


தஞ்சை நகர ர.ர.க்களிடம் விசாரித்தபோது, ""தன்னைவிட யாரும் பவரா இருக்கக் கூடாதுங்கிறது அமைச்சர் வைத்திலிங்கத்தின் சித்தாந்தம். தஞ்சாவூர் வடக்கு ம.செ.வா இருப்பவர் தஞ்சை எம்.எல்.ஏ. ரெங்கசாமி. அவரை மட்டம்தட்டியே வச்சிருக்கார் மந்திரி. சமீபத்தில் எம்.எல்.ஏ. ரெங்கசாமி வீட்டுத் திருமணம் ஒன்று நடந்தது. அதுக்கு எல்லா மந்திரிகளும் வர்றதா இருந்தாங்க. வைத்தி என்ன செஞ்சார் தெரியுமா? 

எந்த மந்திரியும் அந்தக் கல்யாணத்துக்கு வராத மாதிரி பண்ணிட்டார். அதேபோல் கட்சிக்காரங் களைக் கூப்பிட்டு அந்தக் கல்யாணத்துக்கு விளம்பர பேனரோ, கட்-அவுட்டுகளோ வைக்கக் கூடாதுன்னு சொல்லிட்டார். பாவம் ரெங்கசாமி எம்.எல்.ஏ., தன் வீட்டுக் கல்யாணத்தை தன்னந்தனியா பரிதாபமா அவர் நடத்தும்படி ஆயிடிச்சி. அதேபோல் இப்ப இருக்கும் கலெக்டர் பாஸ்கரோடு மோதுறதையும் வழக்கமா வச்சிருக்கார் மந்திரி. 

காரணம்  கலெக்டர் பாஸ்கரன் ஸ்ட்ரைட் பார்வேர்டான ஆள். அவரைக் கூப்பிட்டு தன் ஒரத்தநாடு தொகுதியில் வறட்சி அதிகமா இருப் பதா ரிப்போர்ட் கேட்டார் மந்திரி. ஆனால் கலெக்டரோ விசிட் அடிச்சி பார்த்துட்டு அப்படி தரமுடியாதுன்னு சொல்லிட்டார். அதனால் கலெக்டரை மாத்தியே தீருவேன்னு பிடிவாதமா இருக்கார். தஞ்சை புதுப்பேருந்து நிலையத்துக்கு எதிரில் இருக்கும் சிவாஸ் ஓட்டலை மகனின் கண்ட் ரோலுக்கு கொண்டுவந்து விட் டார். டாஸ்மாக் லோடு லாரிகளை பினாமி பெயர்களில் ஓட்டுகிறார். 


அதை அவரது பி.ஏ. காந்தி நிர்வாகம் பண்ணுகிறார். பி.ஏ.காந்தி ஒரு பங்களாவைக் கட்ட, கடந்த வாரம் அதைத் திறந்து வைத்த வைத்திலிங்கம், "இதேபோல நல்ல பங்களா ஒன்றை எனக்கு வாங்கிக் கொடு' என்றிருக்கிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சையைக் குறிவைத்திருக்கும் வைத்தி, அடுத்து அம்மாதான் பிரதமர், நான் மத்திய மந்திரி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்'' என்றார்கள் நம்மிடம்.

அமைச்சர் கே.பி. முனு சாமியாவது துறை வேலைகளைப் பார்க்கிறாரா? என்று விசாரித்தபோது ""20 வருடங்களுக்கு மேல மா.செ.வா இருப்பதால்தான் இவருக்கு மந்திரி பதவி கொடுக்கப்பட்டிருக்கு. 2006-களில் தம்பிதுரை இங்க பவரா இருந்தார். அப்ப கிருஷ்ணகிரி மா.செ.வா இருந்த அசோக்குமார், காவேரிப்பட்டினம் தொகுதிக்கு கே.பி. முனுசாமியைப் பரிந்துரை செய்றேன்னு தலைமைக்கு கடிதம் எழுதினார். 

அந்த விசுவாசத்துக்காக அசோக்குமாரை இப்ப  மாவட்ட சேர்மனா ஆக்கியிருக்கார் மந்திரி. அதேபோல்  தனது வலது கரமாகவும் வச்சிருக்கார். திருமணமே பண்ணிக்காத அசோக்குமார், பணம் காசுக்கு ஆசைப்படமாட்டார்ங்கிறது முனுசாமியின் நம்பிக்கை. அதனால் இப்ப அசோக்குமார்  ஆக்டிங் மந்திரி போலவே இருக்கார்.  

முனுசாமி பதவிக்கு வந்ததுமே கொஞ்சம் நஞ்சம் இருந்த தம்பிதுரை ஆதரவாளர்களையும் தன் கஸ்டடிக்குக் கொண்டுவந்துட்டார். காவேரிப் பட்டினம் ஒ.செ.அர்ஜுனன் இருக்காரே அவர் தம்பிதுரையின் தீவிர ஆதரவாளர் .அவரையே தன்னிடம் சரணடைய வச்சி உதவிக்கரமும் நீட்டியிருக்கார் மந்திரி.  

இவர்கிட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாய் உதவியாளரா இருந்த சிவலிங்கம், இவருக்குத் தெரியாம தி.மு.க. குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு சத்துணவு வேலை கிடைக்கும்படி பண்ணிட்டார். இதைக் கேள்விப்பட்டு கொதிச்சிப்போன முனுசாமி, அந்த சிவலிங்கத்தை உடனே வீட்டைவிட்டு அனுப்பிட்டார். இப்ப அமைச்சருக்கும் மத்தூர் ஒ.செ.ஸ்ரீராமுலுக்கும் இடையில்தான் பனிப்போர் நடக்குது. சமீபத்தில் நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் பிரபுங்கிறவரை அமைச்சர் நிறுத்தினார். 

ஸ்ரீராமுலுவோ தட்சணாமூர்த்தி என்பவரை களம் இறக்கினார். 11 டைரக்டர்களில் 7 பேரை ஸ்ரீராமுலு கடத்திக்கிட்டுப் போய்ட்டார். அப்படியிருந்தும் வேட்புமனுவே கொடுக்காமல் பிரபுவை சேர்மனா அறிவிக்கும்படி செய்தார் மந்திரி. அதனால் ஸ்ரீராமுலுவுக்கும் இவருக்குமான உரசல் அதிகமாகி இருக்கு. தொகுதி மக்களுக்கு மந்திரி தரிசனம் கொடுக்கிறதே இல்லை''’என்றார்கள் பலரும்.

அவரது உள்ளாட்சித் துறையில் விசாரித்தபோது ""ஏற்கனவே 5 சதமாக இருந்த கமிஷன் இப்போது 9 சதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கு'' என்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. உள்கட்சி பஞ்சாயத்தை நடத்திவரும் இந்த நால்வர் அணியின் செயல்பாடுகள் இப்படித்தான் இருக்கின்றன.

-நமது நிருபர்கள்
படங்கள் : ஸ்டாலின் & அசோக்

ad

ad