வடக்கு கிழக்கில் அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு காணி உரிமை கிடைத்துள்ளது!- ஜனாதிபதி
வடக்கு கிழக்கில்ஒரு அங்குலமேனும் சொந்தமற்றவர்களுக்கு இன்று காணி உரிமை கிடைத்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஒரு அங்குலம் காணியையேனும் சொந்தம் என சொல்லிக்கொள்ள முடியாத சூழ்நிலை காணப்பட்டது. அவ்வாறான ஓர் சமூகத்திற்கு இன்று காணி உரிமை கிடைக்கப்பெற்றுள்ளது.
வடக்கு கிழக்கு மாகாணஙங்களைச் சேர்ந்த 3500 குடும்பங்களுக்கு ரன்பிம காணித் திட்டத்தின் கீழ் காணி உரிமைகள் வழங்கப்பட்டன.
இந்தக் காணிகளை விற்பனை செய்யவோ குத்தகைக்கு விடவோ முடியும். எனினும், தயவு செய்து இந்தக் காணிகளை விற்பனை செய்ய வேண்டாம். உங்கள் பிள்ளைகளும் இதனை அனுபவிக்க இடமளிக்கவும்.
உங்கள் வீட்டுத் தோட்டத்தில் பூக்கன்றுகளுக்கு பதிலாக ஓரு மிளகாய் செடியையேனும் நாட்டவும். பழங்களையோ மரக்கறி வகைகளையோ பயிரிடுவதன் மூலம் நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்களும் வந்துள்ளனர். நாட்டு மக்களுக்கு பேதமின்றி சேவையாற்றுகின்றோம். இந்த நாட்டின் அனைவரும் மகிழ்ச்சியுடனும் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும்.
நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள் என்பதனை ஒருபோதும் மறந்துவிட வேண்டாம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளளார்.
அலரி மாளிகையில் நடைபெற்ற ரன்பிம காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.