ராஜினாமாவை திரும்ப பெற அத்வானி நிபந்தனை?
இதனிடையே அத்வானியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் குஜராத் முதல் அமைச்சர் நரேந்திரமோடி. அப்போது ராஜினாமாவை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
சங் பரிவார் அமைப்புகள் கட்சியில் தலையிடுவதை நிறுத்தும் வரை, எனது முடிவை கைவிட மாட்டேன் என அத்வானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், மோடிக்கு பொறுப்பு வழங்கப்பட்டது பற்றி பிரச்சனை இல்லை. கட்சியில் எடுக்கப்படும் முடிவுகள் உரிய முறையில் எடுக்கப்பட வேண்டும். கட்சி தலைவர் ராஜ்நாத் சிங், ஆர் எஸ் எஸ் அமைப்பின் கைகளுக்கு கட்டுப்பட்ட கருவியாக உள்ளார். ஆர் எஸ் எஸ் மற்றும் வி.எச்.பி., அமைப்புகள் கட்சிக்கு உத்தரவிடக்கூடாது என அத்வானி கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.