யாழ்ப்பாணத்தில் இரண்டு இறங்குதுறைகள் விரைவில் திறந்து வைப்பு
யாழ்ப்பாணத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ள பாசையூர் மற்றும் சுழிபுரம் இறங்குதுறைகள் அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது.
இரண்டு இறங்குதுறைகளும் கடந்தகால யுத்த சூழ்நிலை காரணமாக சேதமடைந்திருந்தன. இதில் பாசையூர் இறங்குறையை புனரமைக்கும் பணியினை சர்வதேச புலம்பெயர்வோர் (ஐ.ஓ.எம்) நிறுவனம் பொறுப்பேற்றிருந்தது. இதற்கென சுமார் 60 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
சுழிபுரம் இறங்குதுறை கடற்றொழில் அமைச்சினால் 12 மில்லியன் ரூபா செலவில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் 26ம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தரவுள்ள நீரியல்வளத்துறை மற்றும் கடற்றொழில்துறை அமைச்சர் ராஜித சேனாரத்தினவினால் இந்த இரண்டு இறங்குதுறைகளும் திறந்து வைக்கப்படவுள்ளது.