புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஆக., 2013

சுவிசில் வீதியோரங்களில் இனி விபசாரம் செய்ய முடியும் 
தெருவோரத்தில் விபச்சார பெட்டிகளை அமைத்துவரும் சுவிஸ் அரசு, இவற்றை வரும் ஆகஸ்ட் 26 உத்தியோக பூர்வமாக திறந்துவைக்க உள்ளது. தெருவோரத்தில் இடம்பெறும் முறையற்ற
உடலுறவுகளை தவிர்க்கவும், விபச்சாரிகளுக்கு பாதுகாப்பு வழங்கவும் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தெருவோரங்களில் மரப்பலகைகளால் உருவக்கப்பட்டிருக்கும் இப் பெட்டி போன்ற அறையினுள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகள் தொங்கவிடப்பட்டிருக்கும். அத்துடன் விபச்சாரிகளுக்கு, வாடிக்கையாளர்களால் ஏதாவது அசௌகரியங்கள் ஏற்படும் பட்சத்தில் அதில் இருந்து தப்பிக்கும் முகமாக அலார வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப் பெட்டிகளை கார் ஓட்டுனர்கள் மாத்திரமே பயன்படுத்த முடியும், மோட்டார் சைக்கில் ஓட்டிகளோ, பாதசாரிகளோ பயன்படுத்த முடியாது. விபச்சாரம் சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சூரிச் நகரில் இப்படியான திட்டங்கள் அவசியமாகின்றது என்று அந் நகரத்தின் சமூகவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இப் பெட்டிகளினும் தொழில் நடாத்தும் விபச்சாரிகள் அரசுக்கு வரியாக ஒவ்வொரு தடவையும் 5 சுவிஸ் பிராங்குகளை செலுத்தவேண்டுமாம்.

ad

ad