புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஆக., 2013

நெடுந்தீவுக்கு சிறிதரன் தலைமையிலான குழுவினர் விஜயம்: ஈ.பி.டி.பியின் மிரட்டலுக்கு மத்தியிலும் மக்கள் அமோக வரவேற்பு!
இலங்கை இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்கள் மற்றும் ஈ.பி.டிபியின் மிரட்டல்களுக்கு மத்தியிலும் நெடுந்தீவுக்குச் சென்ற தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் உள்ளிட்ட குழுவினருக்கு நெடுந்தீவு மக்கள் மாலை அணிவித்து பெரும் வரவேற்பளித்துள்ளனர்.
அரசாங்கத்துடனும், இராணுவத்துடனும் சேர்ந்தியங்கும் ஈ.பி.டி.பி அமைப்பின் காட்டு தர்பாருக்குள் அகப்பட்டு சிறை வாழ்வை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம். எங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என மக்கள் கண்ணீருடன் கேட்டிருக்கின்றனர்.
வடக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர் விந்தன் கனகரத்தினத்தின் ஆதரவாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நெடுந்தீவுக்குச் சென்றிருந்த சமயம் அங்கு ஈ. பி.டி.பி ஆதரவாளர்களினால் தாக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெரும் திரளானோர் நெடுந்தீவுக்குள் நுழைந்திருந்தனர்.
இந்நிலையிலேயே மக்கள் பெரும் ஆதரவு கொடுத்திருக்கின்றனர். காலை பெய்த கடும் மழையின் மத்தியிலும், சாதாரண மக்கள் பயணிக்கும் படகில் பயணம் மேற்கொண்ட கூட்டமைப்பினருக்கு அப்பகுதி மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.
ஆயினும் கூட்டமைப்பினர் நெடுந்தீவுக்கு விஐயம் செய்வதாக வெளியான தகவலையடுத்து அங்குள்ள மக்கள் கூட்டமைப்பினருக்கு ஆதரவளிக்ககூடாது, என்றும் அவர்களுக்கு வாகனங்கள் வழங்கக் கூடாது எனவும் ஈபிடிபியினர் மிரட்டினர்.
எனினும் இதனையும் மீறி ஆதரவளித்து இன்முகத்தோடு வரவேற்றனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் பல்வேறு இடங்களிற்கும் விஐயம் மேற்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டதுடன் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
அத்தோடு ஈபிடிபியின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கட்சி ஆதரவாளர்களை வைத்தியசாலையில் சென்று பார்வையிட்டனர்.
இவ்வாறு கூட்டமைப்பினரின் விஜயங்களின் போது ஈபிடிபியினரும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு, அனைவரையும் கண்காணித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஆதரவு தெரிவித்திருந்த பலரும் இன்றும் மிரட்டப்பட்டதாக பொது மக்கள் பாராளுமன்ற உறுப்பினரிடம் முறையிட்டுள்ளனர். .

ad

ad