-

22 ஆக., 2013

மெட்ராஸ் கபே படத்திற்கு எதிராக மும்பையில் திரையரங்கம் முற்றுகை! பேனர்கள் கிழிப்பு!
மெட்ராஸ் கஃபே திரைப்படத்தை மும்பையில் வெளியிடக்கூடாது என்று மும்பை பாரதிய ஜனதா கட்சி தலைவர் அஷிஷ் செலார் கூறி இருந்தார், படத்தில் காட்டப்படும் காட்சிகள் உண்மைக்கு
புறம்பானவைகளாக இருக்கின்றன. படம் வெளிவந்தால் அது தமிழர்களை அவமானபடுத்து போல் அமையும். அதனால் இந்தியாவெங்கும் கலவரங்கள் நடக்க வாய்ப்புள்ளது. ஆகவே மும்பையில் அந்த படத்தை திரையிடக்கூடாது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வியாழக்கிழமை மும்பை சினி மேச்க்ஸ் திரை அரங்கம் பாஜக பிரமுகர்கள் மற்றும் தமிழர்களால் முற்றுகையிடப்பட்டது. ப்ளெக்ஸ் பேனர்கள் கிழிப்தெரியப்பட்டு அனைத்து பதாகைகளும் உடைக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

ad

ad