புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2013

வெலிவேரிய வன்முறையில் உயிரிழந்த மூவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக ஏமாற்றும் அதிகாரிகள்: சடலங்களும் மறைத்து வைப்பு
அரச படையினரால் வெலிவேரிய பிரதேசத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் படுகாயமடைந்தவர்களென தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் மேலும் மூன்று பேர் ஏற்கனவே இறந்து விட்டதாக இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவர்களில் பெயர் விபரங்களையும் அந்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
பெயர் - சாந்த தினேஷ்( வயது - 45) , விலாசம் - 230 -7, வெலிவேரிய, நீதிமன்ற வைத்திய விசாரணை படிவத்தின் இலக்கம் (ஜீ.ஏ.ரி.இலக்கம்) -974-2013. இவருக்கு தலையில் இடதுபுறத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து, அதிகளவில் இரத்தம் வெளியேறியதால் மரணம் சம்பவித்துள்ளது. தாக்குதலில் இடது காதுக்கு மேல் உள்ள மண்டையோட்டு பகுதி வெடித்துள்ளது.
பெயர் - சுனந்த பெரேரா( வயது - 37), விலாசம் - 01-58 ஜயலத் நிவாச, வெலிவேரிய, நீதிமன்ற வைத்திய விசாரணை படிவத்தின் இலக்கம் - 983 -2013. இவரது தலையில் கூரிய ஆயுதத்தினால் குத்தப்பட்டுள்ளது. இரத்த போக்கு காரணமாக மரணம் சம்பவித்துள்ளது. தாக்குதலில் கழுத்தில் உள்ள நரம்பு பகுதி துண்டிக்கப்பட்டுளளது. தலையில் பின்புறம் தாக்கப்பட்டதால், மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.
பெயர் டி.டி. ஜயவர்தன, விலாசம்- 75-01 வில்கொல்ல பொதியாகொட, கம்பஹா. நீதிமன்ற மரண விசாரணை படிவத்தின் இலக்கம் 987-2013 . டெலிகொம் ஊழியர். பணி முடிந்து வீட்டுக்கு சென்று, பிள்ளையின் வயிற்று வலிக்காக தேசிக்காய் வாங்குவதற்காக கடைக்கு சென்றிருந்தார். இரும்பு கம்பியினால் தாக்கப்பட்டதால், இவரது தலை பகுதியில் மண்டையோடு உடைந்துள்ளது. இதனால் மூளையில் ஏற்பட்ட இரத்த கசிவினால் மரணம் சம்பவித்துள்ளது.
இவர்கள் மூன்று பேரும் இறந்துள்ள போதிலும் இவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாக கூறி அதிகாரிகள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இதனை தவிர பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைவராக இருக்கும் அப்பலோ மருத்துவமனையில் மூன்று சடலங்கள் மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
இந்த சடலங்கள் வத்துப்பிட்டிவல வைத்தியசாலையில் இருந்து அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
வைத்தியசாலையின் நீதிமன்ற மரண விசாரணை அதிகாரியின் படிவம் பூர்த்தி செய்யப்படாமல் சடலங்கள் அப்பலோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நீதிமன்ற விசாரணை அதிகாரியின் அறிக்கையின்றியே சடலங்கள் அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதால், இந்த சடலங்கள் தொடர்பான தகவல்கள் எங்கும் குறிப்பிடப்படவில்லை.
இந்த நிலைமை அரசாங்கத்திற்கு சாதமானது என்பதால், அந்த சடலங்களை அழித்து விடுமாறு பாதுகாப்புச் செயலாளரும் மருத்துவமனையின் தலைவருமான கோத்தபாய உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் குடிநீரில் கலந்துள்ள விஷ இரசாயனம் காரணமாக மக்களுக்கு நோய்கள் ஏற்பட்டு வந்தது. இதனால் தமக்கு சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுக்குமாறு மக்கள் அதிகாரிகளிடம் கோரி வந்தனர்.
இந்த நிலைமைக்கு காரணமாக தொழிற்சாலை ஒன்றை மூடுமாறும், சுத்தமான குடிநீரை வழங்குமாறும் கோரி அண்மையில் மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் மீது இராணுவம் கொலைவெறி தாக்குதல் நடத்தியத்தில் மூன்று பேர் உயிரிழந்தாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
சம்பவத்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர்.

ad

ad