புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 ஆக., 2013



           "அவ சரியா பக்குவப்பட்டு வரமாட்டேங்கறா... நீங்க அந்த பூஜையைப் பண்ணி சரி பண்ணிட்டீங் கன்னா கூட்டிக்கிட்டுப் போயிடுவேன்' என்று மாந்த்ரீகர் அறவாழியிடம் கொண்டு போய் பெற்ற மகளையே நிறுத்தியிருக்கிறார் அந்த தாய். தாயின் பொடி வைத்துப் பேசும்
பேச்சை புரிந்து கொண்ட அறவாழி, "படிப்பு வர்றதுக்கான சரஸ்வதி பூஜை தாம்மா இது' என்று நம்பிக்கையூட்டி தொடங்கி வைத்ததோ ரதி-மன்மதன் பூஜையை. இதற்காக அவர் பயன்படுத்தியது போதை வஸ்துக்களை... சென்னை வியாசர்பாடி, பி.வி. காலனியில் இப்படித்தான் ஏழாம் வகுப்பு மாணவி ஒருவளின் வாழ்க்கை கசக்கி எறியப்பட்டிருக்கிறது.

மாந்த்ரீகர் அறவாழிக்குப் பின் சென்ட்ரல் ரயில் நிலையமருகே கடிகார கடை வைத்திருக்கும் அவர் நண்பர் குமார், குமார் மூலமாக விபச்சார தரகர் செல்வம், இவர் மனைவி ஜெயா மூலம் ரெகுலர் கஸ்ட மர்கள் 10 பேர் என்று வக்கிர மிருகங்கள் சிறுமியின் வாழ்க்கையையே சீரழித்திருக்கின்றன. போதை ஊசிகள், மாத்திரைகள் என கட்டாயத் திணிப்புக்கு சிறுமியின் உடலை பழக்கப் படுத்தி முழுநேர பாலியல் தொழிலாளி யாகவே அவளை மாற்றியிருக்கின்றனர்.

திருப்பதியில் விபச்சார கும்பலிட மிருந்து மீட்டு ஆந்திரா போலீசார் பிடித்து விசாரிக்க ஓடி வந்த கதையை ஒரே மூச்சில்... பின்னோக்கி ஓட விட்டிருக் கிறாள். அதன்பின் சைல்டு ஹெல்ப் லைன் உதவியுடன் தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. ராமானுஜம் கவனத்துக்கு விஷயம் போக... சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.ஜி.பி. நரேந்திர பால் சிங்கிடம் வழக்கை ஒப்படைத்திருக்கிறார் ராமானுஜம். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் மாந்த்ரீகர் அறவாழி, விபச்சாரத்தில் தள்ளிய செல்வம், ஜெயா, மற்றொரு ஜெயா, கணேசன், அப்புனு, சதீஷ், சுரேஷ், கவிதா, லதா என்று பத்துக்கும் மேற்பட்டோரை பிடித்து கைது செய்துள்ளனர். இதில் சிறுமியின் தாயும் அடக்கம்.

சிறுமி மருத்துவ சிகிச்சையுடன் அரசு காப்பகத்தில் போ லீஸ் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டிருக்கிறாள். சம்பவம் பற்றியும், கேரக்டர்கள் பற்றியும் ஏரியாவில் விசாரித்தோம்.

வியாசர்பாடி, பி.வி.காலனி 24-வது தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்த அறவாழி பற்றி முதலில் விசாரித்தோம். வீட்டின் உரிமையாளரான சண்முகம், அவர் மகன் சுனில் நம்மிடம், ""15 வருஷமா இங்க வாடகைக்கு இருக்காரு. அவரே ரொம்ப லேட் மேரேஜ்தான். நாலஞ்சு வருஷத்துக்கு முன்னாடிதான் ஏதோ பரிகார பூஜை பண்ணி கைகூடுச்சுன்னு சொல்லிட்டிருப்பாரு. பொண்டாட்டி தனம் பேர்லதான் தனம் ஜோதிட நிலையம்னு நடத்தி வந்தாரு. பக்கத்துல சாஸ்திரி நகர்லதான் குடும்பம் இருக்கு. அவர் மட்டும் இங்க வந்து போவாரு. திடீர்னு 15-ந்தேதி போலீஸ் நிறைய பேர் வந்து அவரை அரெஸ்ட் பண்ணி கூட்டிப் போனாங்க. வீட்டுக்கதவை பூட்டிட்டாங்க. மத்த விஷயம்லாம் டி.வி., பேப்பர்ல பாத்துதான் தெரிஞ்சுக்கிட்டோம்'' என்றனர்.

அறவாழி மாந்த்ரீகர் வீட்டருகே மளிகைக் கடை வைத்திருக்கும் முருகேசன், ""இந்த ஜோசியக்காரரு பத்தி வெளில ஒண் ணும் தெரியலே. ஆனா அந்தப் பொண்ணு நடத்தை ரொம்ப மோசம்ங்க. 6 மாதத்துக்கு முன்னால கூட ஏரியாகாரங்க அந்த பொண்ணை அடிச்சி விரட்டி விட்டிருக்காங்க. பக்கத்துலயிருக் கிற பிரிட்ஜ் மேல நின்னுக்கிட்டு போறவன் வர்றவனையெல்லாம் அம்பது, நூறுக்கு மடக்கிடும். ஊருல இருக்கற பொடியனுங்க கெட்டுறப் போறாங்கன்னு ஊர் ஜனமே அதை விரட்டி விட் டுச்சு. இந்தப் பொண்ணை விட டபுளு அவங்கம்மா. ஒண்ணா வது குறுக்குத் தெருவுல போயி கேட்டுப்பாருங்க. நிறைய்ய சொல்லுவாங்க'' என்று வெடித்துக் கொட்டினார் முருகேசன்.

பக்கத்து வீட்டுக்காரரான அறிவுச்சுடர் என்ற பெண்மணி, ""இந்தப் பொண்ணு வந்தாவே ஏரியாக்காரங்க நிக்க விடாம விரட்டிருவோம். தெருமுனைக்கே வராது. எங்களைத் தாண்டி ஜோசியக்காரு வீட்டுக்குப் போச்சுங்கறது நம்பறா மாதிரி இல்லே. தப்பு வேற எங்கியோ நடந்திருக்குது'' என்றார். இதே தெருவில் பூ கட்டி வியாபாரம் செய்யும் மயிலா என்ற பெண், ""அந்த ஜோசியக்காரு நாங்க ஜாதகம் பார்க்கப் போனாலே முகத்தை கூட நிமிர்ந்து பாக்க மாட்டாரு. இதுல ஏதோ சதி இருக்குது. யாரையோ காப்பாத்த இவரை மாட்டிவிட்டிருக் காங்க'' என்று வருத்தப்பட்டார்.

ஜோதிடர் மனைவி தனத்தை தேடி வீட்டுக்கு போன போது பூட்டிக்கிடந்தது. தொடர்ந்து ஜோதிடர் அறவாழியை தவறே செய்யாதவர் போல கருத்துக்கள் பொதுமக்கள் சைடிலிருந்து வந்த வேளையில் நம்மை தனியே சந்தித்த சமூக ஆர்வலர் அரிபாபு, ""மாரியோட பொண்டாட்டிதான் இந்த வசந்தி. அதோட பொண்ணுதான் இப்ப பிரச்சினையில சிக்கிக்கிட்டிருக் கிற பொண்ணு. நாங்க "கருப்பி'ன்னு தான் பேரு வெச்சு அந்தப் பொண்ணை கூப்பிடுவோம். பலமுறை இந்தப் பொண்ணோட "தப்பு'க்காக சில்ரன்ஸ் ஹோம்ல போட்டிருக்காங்க. இப்ப புதுசா அந்தப் பொண்ணு போலீஸ்ல மாட்டலே. அந்த ஜோசியக் காரன் அறவாழியை தேடிக்கினு அடிக்கடி போலீஸ்காரங்க வந்துக்கிட்டும், போய்க்கிட்டும்தான் இருப்பாங்க. இந்த கூத்து அத்தனையும் போலீசுகாரங்களுக்கு தெரியும். அதனாலதான் உள்ளூர் போலீசை நம்பாம டி.ஜி.பி., சி.பி.சி.ஐ.டி. போலீஸ்கிட்ட இந்த கேசை குடுத்ததே... ஊரு உலகம் அடங் குன பின்னால இந்த ஜோசியக் காரன் வீட்டுக்கு அந்தப் பொண் ணும் வரும். நாலஞ்சு விபச்சார தொழிலுக்காரங்களும் வரு வாங்க. அந்தப் பொண்ணு ஸ்டேட்மெண்ட்டை கரெக்டா கொடுத்ததுன்னா... நிறைய போ லீஸ்காரங்களே இதுல மாட்டு வாங்க. பலமுறை இங்கயிருக்கிற போலீஸ்காரங்களையும், இந்த அறவாழியையும் கூப்பிட்டு நான் எச்சரிக்கை பண்ணதால ஏரியா வை காலி பண்ணிக் கிட்டு போக வெச்சிட்டாங்க. என் உயிருக்கே ஆபத்து இருக்கு... இப்போ தைக்கு என் பேரு அரிபாபுன்னே வெச்சுக்கங்க. கருத்து தெரியாத வயசுல அந்தப் பொண்ணை இப்படி நரகத்துல தள்ளுன தாய்க்காரி, துணை போன இந்த ஜோசியக்காரன், புரோக்கர் பசங்க யாரையும் விட்டு வைக்கக் கூடாதுங்க'' என்று படபடவென பொரிந்து தள்ளினார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு சென்னை திருவொற்றியூர் இளம் பெண்ணை திண்டிவனம் விபச் சார விடுதியில் விற்றதற்கு காரண மாயிருந்தது தரகர்களுடன், சில காவலர்களும்தான். சரக ஐ.ஜி. யாக இருந்த திலகவதிதான் அந்த வழக்கில் ஒட்டுமொத்தமாக அனைவரையும் கைது செய்ய பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்தார். அதே நீதி இப்போதும் திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது. 

ad

ad