புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஆக., 2013

லண்டன் சினி வேர்ல்டை உலுப்பிய எடுத்த ஈழத் தமிழர்கள
லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் சினிமாவை ஈழத் தமிழர்கள் ஒரு உலுப்பு உலுக்கியுள்ளனர் மற்றாஸ் கஃபே திரைப்படத்தை லண்டனில் உள்ள சினி வேர்ல்ட் நிறுவனமே தனது திரையரங்கில் வெளியிடவுள்ளது.

இத் திரைப்படம் 23ம் திகதி அன்று வெளியாக் உள்ள நிலையில், இத்திரைப்படம் தமிழர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் அமைந்துள்ளது என நூற்றுக்கணக்கான தொலைபேசி அழைப்புகள் போயுள்ளது.

சினி வேர்ல்டின் “கஸ்டமர் சேர்விஸ்” அலுவலகம் ஸ்தம்பிக்கும் அளவில் இந்த தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளது. அழைப்புகளை உள்வாங்க முடியாமல் திணறிய ஊழியர்கள், தாம் தமது மேலிடத்திக்கும் மற்றும் புகார் தெரிவிக்கும் திணைக்களத்திற்கும் தெரிவிப்பதாக கூறியுள்ளார்கள்.

ஈழத் தமிழர்களின் மற்றும் உலகத் தமிழர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதனை பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தெரிவித்திருப்பதை தொடர்ந்து சினி வேர்ல்ட் நிறுவனமானது இனி என்ன செய்வது என்பது தொடர்பாக ஆராய்ந்து வருகிறது என்று மேலும் அறியப்படுகிறது.

லண்டனில் மற்றாஸ் கஃபே திரைப்படத்தை திரையிட்டால், அது பெரும் ரகளையில் முடியலாம் என்று அவர்களுக்கு தெரியாதா என்ன ? இதேவேளை இத் திரைப்படத்தை லண்டனில் உள்ள அனைத்து சிங்களவர்களும் பார்க்கவேண்டும் என்று சிங்களவர்கள், பேஃஸ் புக் ஊடாக பரப்புரைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இத் திரைப்படத்தை லண்டனுக்கு கொள்வனவு செய்த இந்திக் கம்பெனிக்கும் பல தொலைபேசி அழைப்புகள் சென்றுள்ளதாக அறியப்படுகிறது.

சாதாரண படம் என நினைத்து அதனை தாம் வாங்கிவிட்டதாகவும், இதில் இவ்வளவு வில்லங்கம் இருக்கும் என்று கடைசிவரை தமக்குத் தெரியாது என்று கொள்வனவு செய்த கம்பெனி கூறியுள்ளது.

இது போன்ற எதிர்பு தமிழ் நாடு மற்றும் லண்டனில் கிளம்பியுள்ள நிலையில், கனடா , அமெரிக்கா மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளிலும் கிளம்புமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

ad

ad