சோழவந்தான் அருகே மார்பகங்கள் அறுக்கப்பட்டு கொடூரமான முறையில் தாய், மகள் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதல் காரணமாக இந்த கொலை நடந்ததா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
மகள் முருகேசுவரி (32), காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருடைய கணவர் மகேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்துபோனார். இவர்களுடைய மகன்கள், மகேந்திரனின் தாயார் வீட்டில் இருந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் செல்லம்மாளும், மகள் முருகேசுவரியும் மேலக்கால் கிராமத்தில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு செல்லம்மாளும், முருகேசுவரியும் அரிவாளால் வெட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுக்கிடந்தனர்.
இருவருடைய மார்பகங்களும் அறுக்கப்பட்டு இருந்தன. தலை உள்பட உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தன. வீட்டு வாசலிலேயே இருவரும் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்ததை, நேற்று காலையில் அந்த பகுதியில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
தகவல் அறிந்ததும், சோழவந்தான் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர், தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. போலீஸ் மோப்பநாய் கொலை நடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி அதன்பின் நின்று விட்டது. கொடூரமான முறையில் செல்லம்மாளும், அவருடைய மகள் முருகேசுவரியும் கொலை செய்யப்பட்டது ஏன்? கள்ளக்காதல் விவகாரமா அல்லது வேறு காரணம் உண்டா? என்பது பற்றி விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விசாரணையில் இதே ஊரைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் திடீரென்று தலைமறைவாகி விட்டதாக தெரியவந்துள்ளது. அவருக்கும் இந்த கொலைகளுக்கும் தொடர்பு உண்டா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது.