புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 ஆக., 2013


img1130807031_1_1
கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருக்க தடையாய் கணவன் இருந்ததால் அவரை கொலை செய்தோம் என்று நாம் தமிழர் கட்சி பிரமுகர் பசும்பொன் ராஜாவின் மனைவி சரண்யா விசாரணையில் தெரிவித்துள்ளார். தெருவைச் சேர்ந்தவர் பசும்பொன்ராஜா (28). நாம் தமிழர் கட்சி திருதிருத்தணி மேட்டுத்வள்ளூர் மேற்கு மாவட்ட இணை செயலாளராக இருந்தார். கோணிப்பை வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு 4 வயதில் மருதபாண்டி என்ற மகன் உள்ளான்.


நேற்று முன்தினம் இரவு பசும்பொன்ராஜா திருத்தணி நகர எல்லையில் சித்தூர் சாலையில் மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அருகில் அவரது மோட்டார்சைக்கிளும், செல்போனும் கிடந்தது.
இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.
பசும்பொன் ராஜா உடலுக்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மதியம் பசும் பொன்ராஜா உடல் பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது மனைவி சரண்யாவின் நடவடிக்கை போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் நெருங்கி பழகி வந்ததும் தெரிந்தது.
இதையடுத்து சரண்யாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது திருத்தணியில் வசிக்கும் கள்ளக்காதலன் சசிக்குமாருடன் சேர்ந்து கூலிப் படையினரை ஏவி கணவரை தீர்த்து கட்டியதை ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து சரண்யா, கள்ளக்காதலன் சசிக்குமார், கூலிப்படையைச் சேர்ந்த திருத்தணி இந்திராநகரைச் சேர்ந்த நாகராஜன் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய கூலிப்படையைச் சேர்ந்த அதே பகுதியில் வசிக்கும் சுகுமாரை தேடி வருகின்றனர்.
பசும்பொன்ராஜா, அகூர் பகுதியில் கோணிப்பை தைக்கும் கடை நடத்தி வந்தார். அங்கு கொரியர் கலெக்ஷன் சென்டரும் வைத்திருந்தார்.
இதில் சசிக்குமாரும், சரண்யாவும் வேலை பார்த்தனர். அப்போது பசும் பொன்ராஜாவுக்கும், சரண்யாவுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனாலும் வேலை பார்த்த போது சசிக்குமாருடன் கிடைத்த நட்பை சரண்யா தொடர்ந்தார். பின்னர் இது கள்ளக்காதலாக மாறியது.
சசிக்குமார் அடிக்கடி சரண்யாவை சந்திக்க வீட்டிற்கு வந்தார். கடையில் வேலை பார்த்தவர் என்பதால் பசும்பொன்ராஜாவுக்கு சந்தேகம் வர வில்லை.
இதனை சாதகமாக பயன் படுத்திய கள்ளக்காதலர்கள் தனிமையில் ஜாலியாக இருந்தனர். 4 வருடத்திற்கும் மேலாக அவர்கள் உல்லாச வாழ்க்கை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே மனைவியின் தொடர்பு குறித்து அக்கம் பக்கத்தினர் பசும் பொன் ராஜாவிடம் தெரிவித்தனர். இதனால் அவர்களை கண்காணிக்க தொடங்கினார். சில நாட்களுக்கு முன்பு சசிக்குமாரும், சரண்யாவும் ஒன்றாக இருப்பதை பசும் பொன்ராஜா பார்த்து விட்டார். அவர்கள் 2 பேரையும் கடுமையாக திட்டி கண்டித்தார். மேலும் மனைவி சரண்யா வெளியில் செல்ல கட்டுப்பாடுகள் விதித்தார்.
கள்ளக்காதலனை சந்திக்க முடியாமல் சரண்யா தவித்தார். கணவர் இருக்கும் வரை ஜாலியாக இருக்க முடியாது என நினைத்த அவர் கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்தார்.
திட்டம் குறித்து கள்ளக்காலன் சசிக்குமாரிடம் கூறினார். அவரும் கொலை செய்ய ஒப்புக் கொண்டார். இதுபற்றி அவர் அதே பகுதியைச் சேர்ந்த கூலிப் படையினர் சுகுமார், நாகராஜிடம் தெரிவித்து கொலை திட்டங்களை வகுத்தனர். நேற்று முன்தினம் வியாபாரம் சம்பந்தமாக வெளியில் செல்வதாக பசும் பொன்ராஜா மனைவி சரண்யாவுக்கு தகவல் கொடுத்து உள்ளார்.
கணவரை தீர்த்து கட்ட இதுதான் சரியான நேரம் என நினைத்த அவர் இதுபற்றி கள்ளக்காதலன் சசிக்குமார், கூலிப்படையினருக்கு தெரிவித்தார். அவர்கள் பசும்பொன் ராஜாவை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வெட்டிக் கொலை செய்து உள்ளனர். மேற்கண்ட தகவல் சரண்யாவிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.
இந்த கொலையில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கிறார்கள். தொடர்ந்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.
சுகுமாரும், நாகராஜும் திருநின்றவூரில் ஆட்டோ ஓட்டி கூலிப்படையினராக பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
கணவரை மனைவியே கள்ளக்காதலனை ஏவி கொன்ற சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ad

ad