7 ஆக., 2013

5 வீரர்கள் பலி! இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது! சோனியா, ராகுல் கடும் கண்டனம்!
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் செவ்வாய்க்கிழமை காலை காஷ்மீரில் பூஞ்ச் மாவட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான்  எல்லையான சக்கந்தாபாத் அருகே, இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர்
. இதில் இந்திய ராணுவ வீரர்கள் 5 பேர் பலியாகினர்.

பாகிஸ்தானின் இந்த அத்துமீறிய செயலுக்கு சோனியா காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது; இது போன்ற அப்பட்டமான துரோகத்திற்கு இந்திய தேசம் ஒரு போதும் அடி பணியாது. இது தொடர்பாக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தாக்குதலில் பலியான வீரரகளுக்கு  எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துகொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி, இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக தான் அதிர்ச்சியுற்றதாக தெரிவித்துள்ளார். இது போன்ற ஆத்திரமூட்டும் செயலுக்கு அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.