-

24 செப்., 2013

ஐ.நாவில் மகிந்த ராஜபக்ச உரை : துளைத்தெடுக்கும் இன்னர்சிட்டி ஊடகம் ! எதிர்ப்பினைக்காட்ட தயாராகும் தமிழர்கள் !
நியூ யோர்க் - ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த கூட்டத் தொடரில் பங்குபற்று வதற்காக சிறிலங்கா அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ச அமெரிக்க சென்றுள்ள நிலையில், ஐ.நாவுக்குள் இயங்கும் சுதந்திர ஊடகமாக
innercitypress, சிறிலங்கா விவகாரத்தினை மையப்படுத்தி ஐ.நா பொதுச்செயலரை நோக்கிய கேள்விக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கிவிட்டது.
இதேவேளை பொங்கு தமிழென சங்கே முழங்கு என்ற முழக்கத்துடன் சிறிலங்கா அரசுத் தலைவருக்கு எதிராக அணிதிர வட அமெரிக்கத் தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

கூட்டத் தொடரின் முதலாம் நாளில் (24-10-2013) மதியம் 1 மணிக்கு சிறிலங்கா அரசுத் தலைவர் உரை நிகழ்த்துவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் , தமிழர்கள் காலை 10 மணி முதலே தங்களுடைய எதிர்ப்பினை காட்ட அணிதிரளவுள்ளனர்.

சிறிலங்கா அரசுத் தலைவரின் ஐ.நா உரையினை மையப்படுத்தி, innercitypress ஊடகர் -Matthew Russell Leeஅவர்கள்; இலங்கையின் இறுதி யுத்த காலத்தில் ஐ.நாவின் செயற்பாடுகள் குறித்தான ஐ.நாவின் உள்ளக மீளாய்வு அறிக்கை தொடர்பில், ஐ.நாவின் பொதுச்செயலரின் நிலைப்பாடு எந்தக்கட்டத்தில் உள்ளதென ஐ.நாவின் பேச்சாளரிடம் பிரஸ்தாபித்துள்ளார்.






ad

ad