புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கு தொட்ர்ந்து அச்சுறுத்தல்; சுதந்திரமாக பிரசாரம் செய்ய முடியாத நிலை என முறைப்பாடு
வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பர்ளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக
அச்சுறுத்தப்பட்டு வருவதாக தமிழ்க் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது. இது குறித்து கூட்டமைப்பு நடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் கருத்துத் தெரிவிக்கையில்;

வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களான குருகுலராசா, பசுபதிப்பிள்ளை, அரியரத்தினம் ஆகியோருக்கு சார்பாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற எமது கட்சி உறுப்பினர்கள் தொட்ர்ச்சியாக அச்சுறுத்தப்படுகின்றனர்.


கடந்த வெள்ளிக்கிழமை திருநகர், கணேசபுரம் பகுதியில் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எமது கட்சி ஆதரவாளர்களை அங்கு வந்த சிலர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனத் தடுத்துள்ளனர்.


இவ்வாறு தடையினைப் பிரயோகித்த குறித்த நபர்களுடன் நான் தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு கதைத்தபோது அவர்களுக்கு தமிழ் தெரியாதென்ற பதில் எனக்கு கிடைத்தது.


இவ்விடயம் தொடர்பாக எம்மைத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட தலைமையகமான அறிவகத்தில் சந்தித்து கலந்துரையாடிய மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்துவிடமும் சுட்டிக்காட்டியுள்ளோம்.


இதனைவிட அண்மையில் நியமனம் பெற்ற முன்பள்ளி ஆசிரியர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள் சிவில் படையணியினர் போன்றோர் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கு குறைந்தது 30 பேரையாவது வாக்களிக்கத் தூண்டுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.


இவ்விடயம் தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடமும், தெரிவத்தாட்சி அலுவலரிடமும், பொலிஸாரிடமும் முறையிட்டுள்ளோம். ஆனால் இத்தகைய சட்டவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையும் இவர்கள் இன்னமும் எடுக்கவில்லை எனவும் சிறீதரன் எம்.பி. மேலும் கூறினார்.

ad

ad