புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2013

சிரியா மீதான தாக்குதல்: அமெரிக்காவுக்கு பிரான்ஸ் கைகொடுக்குமா?

இங்கிலாந்தை தொடர்ந்து பிரான்சும் சிரியா மீதான தாக்குதலிலிருந்து விலகி கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி அசாத்துக்கு எதிரான போரில் 1 லட்சத்திற்கும் மேலானவர்கள் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 21ம் திகதி சிரியா அரசு இரசாயன குண்டுகளை உபயோகித்து தாக்குதல் நடத்தியது.
இதற்கு உலக நாடுகள் பலவும் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்நிலையில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் இணைந்து சிரியா மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூனுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இருந்து போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் இதிலிருந்து விலகி கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் மற்றொரு நட்பு நாடான பிரான்சின் உள்துறை அமைச்சர் மானுவல் வல்ஸ், தங்கள் நாடும் சிரியா மீது தனியாகப் போர் தொடுக்காது என்றும், அமெரிக்க நாடாளுமன்றத் தீர்மானத்திற்காகத் தாங்கள் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரான்சின் பிரதமர் ஜீன் மார்க் ஐரால்ட் இன்று தங்கள் நாட்டின் நாடாளுமன்றத்தின் இரு அவைத் தலைவர்களையும், எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
அதாவது சிரியாவின் நிலைமை குறித்து நாளை நடைபெற இருக்கும் விவாதம் குறித்து, இன்று அவர் தீர்மானிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ad

ad