புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 அக்., 2013

அமெரிக்க கப்பல் மாலுமி, பாதுகாவலர்களுக்கு 14 நாள் காவல்: தூத்துக்குடி குற்றவியல் கோர்ட் உத்தரவு

தூத்துக்குடி அருகே இந்திய கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்த ‘சீமேன் கார்டு‘ என்ற அமெரிக்க தனியார் கப்பலை கடலோர காவல்படையினர் கடந்த 12ந் தேதி மடக்கி பிடித்தனர். இந்த கப்பல் அத்துமீறி
இந்திய எல்லைக்குள் நுழைந்ததால் உளவுப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கப்பலின் கேப்டன் டுட்னிக் வாலன்ஸ்டின், மாலுமிகள், 25 பாதுகாவலர்கள் உள்பட 33 பேரும் கைது செய் யப்பட்டனர். அவர்கள் அங் கிருந்து பலத்த பாதுகாப்புடன் முத்தையா புரம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அமெரிக்க கப்பல் மாலுமிகள், பாதுகாவலர்கள் 33 பேர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி குற்றவியல் நீதிபதி கதிரவன் முன்பு 33 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். 33 பேரையும் 14 நாள் காவலில் வைக்க அப்போது நீதிபதி உத்தரவிட்டார். 33 பேரையும் அக்டோபர் 31ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.

ad

ad