புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2013

சர்வதேச செஞ்சிலுவைக் குழு கருத்தரங்கில் ஜெகத் டயஸ் கலந்து கொள்ள அனுமதி மறுப்பு!
போர்க்குற்றம் சாட்டப்பட்டுள்ள  இராணுவ அதிகாரிகளில் ஒருவரான, மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள கருத்தரங்கில் கலந்து கொள்ள   சர்வதேச செஞ்சிலுவைக் குழு அனுமதி மறுத்துள்ளது.
இதனால், கடும் கோபத்திற்குள்ளான இலங்கை அரசு  சர்வதேச செஞ்சிலுவைக் குழுவுடனான உறவுகள் குறித்து அவசரமாக மீளாய்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்  போரில், 57 வது டிவிசனுக்குத் தலைமை தாங்கிய மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ், பின்னர் ஜேர்மனிக்கான பிரதித் தூதுவராகவும் பணியாற்றியவர்.
அண்மையில், அமெரிக்காவில் மேலதிக பயிற்சிக் கருத்தரங்கிற்கு இவரது பெயர் இராணுவத் தளபதியினால், முன்மொழியப்பட்ட போது, அமெரிக்கா அதனை நிராகரித்திருந்தது.
இந்தநிலையிலேயே அவுஸ்திரேலியாவில் நடத்தவுள்ள கருத்தரங்கில், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் பங்கேற்க சர்வதேச செஞ்சிலுவைக் குழு அனுமதி மறுத்துள்ளது.
வரும் டிசம்பர் மாதம் சிட்னியில் நடைபெறவுள்ள ஆபத்தான நிலைமைகளில் சுகாதாரக் கவனிப்பு என்ற தொனிப்பொருளிலான கருத்தரங்கிற்கு, பொருத்தமான ஒருவரைப் பரிந்துரை செய்யுமாறு இலங்கை இராணுவத்திடம் சர்வதேச செஞ்சிலுவைக் குழு கோரியிருந்தது. 
இலங்கையின் இராணுவத் தலைமையகத்தினால், மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸின் பெயர் பரிந்துரைக்கப்பட்டிருந்த போதிலும், அதனை சர்வதேச செஞ்சிலுவைக் குழு நிராகரித்துள்ளது.
இது  இலங்கை அரசாங்கத்துக்கு குறிப்பாக, பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச  சமூகத்தின் ஒரு பகுதி, இலங்கையைத் தொடர்ந்து அவமானப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைச்சு, 1989ம் ஆண்டு அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கைக்கு வந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவுக்கு 2006ம் ஆண்டில் போருக்கு வழிவகுத்த சூழ்நிலைகள் என்னவென்று தெரியாததல்ல என்றும் தெரிவித்துள்ளது.

ad

ad