புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 அக்., 2013

கல்முனை மாநகர சபை நிதி குழு உறுப்பினர் தெரிவில் மாநகர சபை உறுப்பினர் ஜெயக்குமார் அமோக வெற்றி.

கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு நேற்று புதன்கிழமை மேயர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபையின் நிதிக்குழு உறுப்பினர்கள் தெரிவில் ஆளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கிடையே பலத்த போட்டி நிலவியதால் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதில் ஓர் அங்கமாக அடுத்த ஆண்டிற்கான நிதிக் குழு உறுப்பினர்கள் தெரிவு நடைபெற்றது.

மேயர் தவிர நிதிக் குழுவிற்கு ஐந்து பேரை தெரிவு செய்வதற்காக மாநகர சபை உறுப்பினர்களான ஏ.பறக்கதுல்லா, எஸ்.உமரலி, ஏ.எம்.றியாஸ், எஸ்.ஜெயகுமார், ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய ஏழு உறுப்பினர்களின் பெயர் முன்மொழியப்பட்டது.

இதன்போது ஆளும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் மூவரின் பெயர்கள் முன்மொழியப்படுவதற்குப் பதிலாக ஐவரின் பெயர்கள் முன்மொழியப்பட்டதால் அவர்களிடேயே பலத்த போட்டி நிலவியது. எவரும் விட்டுக் கொடுக்கத் தயாரில்லை. இதனையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் எஸ்.ஜெயகுமார் முன் மொழியப்பட்டு போட்டியிட்டார்.

இதே வேளை ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக ஏ.எம்.றியாஸ் போட்டியிட்டார்.

இந்த இரகசிய வாக்கெடுப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் முன்மொழியப்பட்ட எஸ்.ஜெயகுமார் (16 வாக்குகள்), ஏ.எம்.றியாஸ் (14 வாக்குகள்), எஸ்.உமரலி (12 வாக்குகள்), ஏ.பறக்கதுல்லாஹ் (11 வாக்குகள்) மற்றும் ஏ.ஏ.பஷீர் (10 வாக்குளை) ஆகியோர் வெற்றி பெற்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்ட ஏ.எம்.பிர்தௌஸ் மற்றும் எஸ்.சாலித்தீன் ஆகிய இருவரும் இந்த வாக்கெடுப்பில் தோல்வியுற்றனர்.

ad

ad