புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 அக்., 2013


கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதையினை நாளை முதல் மூன்று நாட்களுக்கு பொது மக்கள் பார்வையிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27ம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் திறந்து வைக்கப்படவுள்ள கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினை எதிர்வரும் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரை பொது மக்கள் பார்வையிட முடியுமென நெடுஞ்சாலைகள் அமைச்சு அறிவித்துள்ளது.

இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க அதிவேக பாதையினூடாக பயணிப்பதற்கான கட்டணங்கள் தொடர்பான சுற்று நிருபம் விரைவில் அமைச்சினால் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிவேக வீதி திறந்தவுடன் பேலியகொடவில் இருந்து கட்டுநாயக்க செல்லும் கார், ஜீப் உள்ளிட்ட சிறிய ரக வாகனங்களுக்கு 300 ரூபா அறவிட பெருந்தெருக்கள் அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அதேவேளை, ஜா-எலவில் இருந்து கட்டுநாயக்கவிற்கும் ஜா-எலவில் இருந்து பேலியகொட வரையும் செல்லும் சிறிய ரக வாகனங்களுக்கு 200 ரூபா அறவிடவும் அமைச்சு தீர்மானித்துள்ளதாக அறியக் கடைத்துள்ளது.
இவ் அதிவேகப் பாதையினூடாகச் செல்லும் வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணங்கள் தொடர்பான இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளதாகவும், அவை விரைவில் அறிவிக்கப்படுமெனவும் இப் பாதையினூடாக பயணிப்பதற்கான ஒழுங்கு விதிகள் தொடர்பாக வாகன உரிமையாளர்களும் சாரதிகளும் அமைச்சினால் அறிவூட்டப்படவுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் 20 நிமிட நேர இடைவேளையில் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு செல்லக் கூடிய அதிவேகப் பாதையினூடாக தினமும் 15 ஆயிரம் வாகனங்கள் பயணிக்க முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாட்டை முன்னிட்டு துரிதமாகச் செய்து முடிக்கப்பட்டுள்ள கொழும்பு - கட்டுநாயக்க அதிவேகப் பாதை தொடர்பான  குறுந்திரைப்படப் பிரதியொன்றை அரசாங்க தகவல் திணைக்கள திரைப்படப் பிரிவுப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ஆரியரத்ன அதுகல இன்று திங்கட்கிழமை தகவல் ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சரித ஹேரத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ad

ad