முல்லைத்தீவில் மட்டும் 7,500 அங்கவீனர்! இறுதி யுத்த வடுக்களாகவுள்ளனர்!

இறுதி யுத்த அவலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் மட்டும் உடல் அவயவங்களை இழந்து சுமார் 7 ஆயிரத்து 500 மாற்றுத் திறனாளிகளாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 11
ஆயிரம் பேர் வரையில் மாற்றுத் திறனாளிகளாக, – அங்கவீனர்களாக – உள்ளனர்.    இதில் 7 ஆயிரத்து 500 பேர் வரையில் கடந்த போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் பிறப்பு, நோய்களின் பாதிப்பு மற்றும் விபத்துக்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படடுள்ளது.
குறித்த மாற்றுத்திறனாளிகள் அடிப்படை வசதிகள் மற்றும் வாழ்வாதார உதவிகள் இல்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.   இவர்களுக்கு பல்வேறு வகையான உதவிகள் தேவையாக உள்ளன. தற்போது மாதாந்த நிவாரணம் ஒன்றினை வழங்குமாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைவிட இவர்கள் நிலைத்து வாழக்கூடிய வாழ்வாதார உதவிகளையும் கோரியுள்ளனர்.மாந்தை கிழக்குப் பிரதேச செயலக பிரிவில் உள்ள மாற்றுத் திறனாளிகள், தமக்கு இந்தப் பகுதியில் கால்நடைப்பண்ணை மற்றும் பால் பதனிடும் நிலையம் ஆகியவற்றை அமைத்து வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். யுத்தங்காரணமாக அங்கவீனமடைந்த ஆயிரக்கணக்கானவாகள் தொடர்ந்தும் அநாதைகளாக ப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.