தடுத்து வைக்கப்பட்டிருந்த ஆஸி, நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுதலை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள் பின்னர் இலங்கையை விட்டு உடனடியாக வெளியேறுவதற்கு இணங்கியதை அடுத்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட வீசா அனுமதியில் குறிப்பிடப்பட்ட விடயங்களை கருத்தில் கொள்ளாமல், குடிவரவு சட்டத்திற்கு முரணாக கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்துவதற்கு முயன்றபோதே அவர்கள் இருவரையும் தடுத்து வைத்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த இரு பாராளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த அவுஸ்திரேலிய பசுமைக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லீ றியான்னொனும், நியூஸிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் லொஜ்ஜியும் இலங்கையின் குடிவரவு சட்டங்களை மீறினார்கள்என குற்றஞ்சாட்டப்பட்டு கைதுசெய்யப்பட்டிருந்தனர்.