புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2013




         காமன்வெல்த் மாநாடு இலங்கையில் துவங்குவதற்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இந்திய அரசாங்கம் தான் அதில் கலந்துகொள்வது தொடர்பாக தனது கள்ள மௌனத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் இந்தியா இதில் கலந்துகொள்ளக்கூடாது என்று குரல் கொடுத்திருப்ப துடன் சட்டமன்ற தீர்மானமும் நிறைவேற்றியிருக்கின்றன. ஆனால் காங்கிரஸ் தனது கண்ணாமூச்சியை தொடர்ந்துகொண்டிருக்கிறது. nakkeeran 

ஐ.நா. சபையின் மனித உரிமை மன்றத்தில் சிலமாதங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக அமெரிக்க தீர்மானத்தை இந்தியா ஆதரிப்ப துடன் இலங்கையை போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தும் திருத்தங்களை இந்தியா முன்மொழிய வேண்டும் என தமிழகத்தில் பெரும் மாணவர் கிளர்ச்சி வெடித்தது. தி.மு.க. மத்திய அமைச்சரவையி லிருந்தே வெளியேறியது. ஆனால் கடைசிவரை இந்தியா ஆதரிக்குமா, இல்லையா என்ற நிலைப்பாட்டை வெளியே சொல்லாமல் இழுத்தடித்து கடைசியில் அமெரிக்கா ஒப்புக்கு கொண்டுவந்த நீர்த்துப்போன தீர்மானத் தை ஆதரித்தது. இந்தியா இலங்கைக்கு அழுத்தம் தரும் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்பது பின்னுக்குத் தள்ளப்பட்டு அந்தத் தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததே பெரிய விஷயம் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டது. 

இதே தந்திரம் இப்போதும் பின்பற்றப் படுகிறது. கொடூரமான போர்க்குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது, அப்படியே நடந்தாலும் இந்தியா அதில் பங்கெடுக்கக் கூடாது என்பதுதான் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் உலகத் தமிழர்களின் கோரிக்கை. ஆனால் இந்தக் கோரிக்கை இப்போது மன்மோகன் சிங் கலந்துகொள்வாரா இல்லையா என்பதாக திரிக்கப்பட்டுவிட்டது. ஒருபுறம் இந்திய வெளியுறவுத் துறை இந்தியா கலந்துகொள்ள வேண்டும் என்கிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகரான சிவசங்கர் மேனன் பிரதமர் செல்ல வேண்டுமென வலியுறுத்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு இலங்கை சென்று வந்த வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை காமன் வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வேன் என்று தன்னிச்சையாக அறிவித்தார். தமிழகத்திலிருந்து அமைச்சரான சுதர்சன நாச்சியப்பனும் பிரதமர் கலந்துகொள்ள வேண்டும் என்றே வற்புறுத்தி வருகிறார்.

இன்னொரு புறம் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன்,  நாராயணசாமி ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்டவர்கள் பிரதமர் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர். 


இந்திய பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் கலந்துகொள்வதும் கலந்துகொள்ளாததும் தான் இங்கே பிரச்சினையா? இந்தியா இந்த மாநாட்டை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்க வேண்டும் என்பதுதானே முக்கியக் கோரிக்கை. ஆனால் பிரதமர் மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்றால் இந்தியப் பிரதிநிதிகள் இதில் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்று அர்த்தமா? இதற்குப் பெயர்தான் பாம்புக்கு தலையும் மீனுக்கு வாலும் காட்டும் வேலை என்பது. பிரதமர் கலந்துகொள்வாரா இல்லையா என்பதை ஒரு மையப் பிரச்சினையாக மாற்றிவிட்டால் பிறகு கடைசி நிமிடத்தில் பிரதமர் கலந்துகொள்ளாமல் இந்திய பிரதிநிதிகள்  யாரையாவது கலந்துகொள்ளச் செய்துவிடலாம். இங்கே தமிழர்களின் உணர்வுகளை மதித்தோம் என்று நாடகமாடலாம். அங்கே ராஜபக்ஷே விற்கு எந்த மனக்குறையும் வராமல் பார்த்துக்கொள்ளலாம். 

மேலும் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளலாமா, வேண்டாமா என்பது அவ்வளவு பெரிய தேசியப் பிரச்சினையா என்ன? 2011-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் மன்மோகன் சிங் கலந்துகொள்ள மறுத்துவிட்டார். இந்தியா சர்வதேச அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஒப்புக்கொள்ளாததால் ஆஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவிற்கு யுரேனியம் விற்க மறுத்தது. இதனால் மன்மோகன் சிங் அந்த மாநாட்டில் கலந்துகொள்ளவில்லை. மாறாக இந்திய குடியரசு துணைத்தலைவர் ஹமீத் அன்சாரி அந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அவருக்கு காமன் வெல்த் அமைப்பு ஒரு நாட்டின் தலைவருக்குரிய முறையான அரசாங்க மரியாதைகள் அளிக்கவில்லை என்றுகூட அப்போது விமர்சனங்கள் எழுந்தன. காமன்வெல்த் மாநாட்டை நடத்தும் நாடு, தனக்கு யுரேனியம் விற்கவில்லை என்பதற்காக அந்த மாநாட்டை இந்திய பிரதமர் புறக்கணித்தார். ஆனால் யுத்தத்தில் ஒரு லட்சம் அப்பாவி தமிழர்களை கொன்று தீர்த்த மிகக்கொடூரமான ஒரு குற்றவாளி யை எதிர்த்து இந்த மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று நாம் கேட் டால், ஏதோ இந்தியாவின் நலன், இலங்கைத் தமிழர்களின் நலன் எல்லாம் ஒட்டு மொத்தமாக மூழ்கிவிடும் என்பதுபோல நாடகமாடுகிறார்கள். 

சீனாவுக்கும் நமக்கும் எல்லையில் எந்த நேரமும் யுத்தத்திற்கான ஆயத்த நிலை இருக்கிறது. ஆனால் இந்தியா முழுக்க சீனப் பொருள்களின் சந்தை விரிந்துகிடக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது? எல்லையில் இவ்வளவு பதட்டத்துடன் இரண்டு ராணுவங்களும் நின்றுகொண்டிருக்கும்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அதனால் எந்த பாதிப்பும் இல்லை. பாகிஸ்தானோடு உள்ள நிலையும் இதுதான். எவ்வளவு மோதல்கள் இருந்தாலும் உறவுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த மாநாட்டை புறக்கணிப்பதால் ஏதோ இலங்கையும் சீனாவும் சேர்ந்து இந்தியா மீது போர் தொடுத்துவிடும் என்ற அளவிற்கு இங்கே காங் கிரஸ்காரர்கள் நம்மை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறார்கள். 2011-ல் ஆஸ்திரேலியாவில் நடந்த மாநாட்டின் இறுதி நாளன்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே பேச அழைக்கப்பட்டபோது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கனடா நாட்டு பிரதமர் ஸ்டீபன் ஹார்ப்பர் மாநாட்டிலிருந்து வெளியேறினார். மேலும் "2013-ல் இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடை பெறும்பட்சத்தில் அதில் கலந்துகொள்ள மாட்டேன்' என்று அப்போதே அறிவித்தார். இன்றளவும் அந்த நிலையைத் தொடர்ந்து வருகிறார். 

ஆனால் காமன் வெல்த் மாநாடு என்பது ஏதோ சர்வதேச முக்கியத் துவம் உள்ள அமைப்பு என்பது போன்றும் இந்தியா அதில் கலந்துகொள்ளா விட்டால் சர்வதேச அரங்கில் அது தனிமைப்பட்டு விடும் என்பது போன்றும் ஒரு கட்டுக்கதை உருவாக்கப்படுகிறது. மேலும் இந்த மாநாட்டின் மூலமாகத்தான் ஈழத்தமிழர்களுக்கு எல்லா நன்மைகளையும் பெற்றுத்தரப் போவது போன்றும் கதை விடுகிறார்கள். இந்த மாநாட்டில் இலங்கை தமிழர்களின் பிரச்சினையை பேசுவதற்கான எந்த இடமும் கிடையாது. காமன்வெல்த் அமைப்பே பிரிட்டிஷாரின் பழைய அடிமை நாடுகள் பரஸ்பர வர்த்தக ஒப்பந்தங்களுக்காக நடத்தப்படும் ஒரு மனமகிழ் மன்றம். அதற்கு அரசியல் முக்கியத்துவம் எதுவும் கிடையாது. ஆனால் இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற விசாரணைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே இந்த மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் போர்க்குற்ற  விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய ஒரு கொடுங்கோலன் பல நாடுகளைக் கொண்ட ஒரு கூட்டமைப்பிற்கு அடுத்த இரண்டாண்டுகளுக்கு தலைவனாக இருக்க வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகவும் அது இலங்கைக்கு எதிரான சர்வதேச அரங்குகளில் நடத்தப்பட்டு வரும் போராட்டங்களை பலவீனமடையச் செய்யும் என்பதும்தான் மனித உரிமையாளர்களின் வாதம். 

சர்வாதிகார போக்கிற்காகவும், நீதித்துறையில் குறுக்கிட்டதற்காகவும், 1995-ம் ஆண்டு நைஜீரியா நாடு காமன்வெல்த்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது. அவசரநிலையை ஜெனரல் முஷ்ரஃப்  பிரகடனம் செய்ததற்காக பாகிஸ்தான் 2007, நவம்பரில் இடைநீக்கம் செய்யப்பட்டது. ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபே தேர்தலில் தில்லுமுல்லு செய்ததற்காக ஜிம்பாப்வே இடை நீக்கம் செய்யப் பட்டது. உரிய நேரத்தில் தேர்தலை நடத்த ஃபிஜி ராணுவ தலைவர் கமடோர் பைனிமராமா தவறியதற் காக அந்த நாடும் காமன்வெல்த்திலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டது. ஆனால் இலங்கையை அதன் வரலாற்றுக் கொடூரங்களுக்காக காமன்வெல்த்தி லிருந்து நீக்க வேண்டும் என்று சொன்னால் மட்டும் ஏன் ஒரு கொடுங்கோலனின்மீது இத்தனை பரிவு? 


இசைப் பிரியா சிங்கள ராணுவத்தினரால் அரைநிர்வாணமாக இழுத்துச்செல்லப்படும் சேனல் 4 வீடியோ காட்சிகள் உலகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகெங்கும் நீதியின்பால் நம்பிக்கை கொண்ட அனைவரையும் மனமுடையச் செய்து விட்டது. பாலச்சந்திரனின் இறுதி புகைப்படத்திற்கும் இசைப்பிரியாவின் இறுதி வீடியோவிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. இருவருமே யுத்தத்தில் கொல்லப்படவில்லை. இருவருமே ராணுவத்தால் பிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இருவரும் பிணமாகக் கிடக்கும் படங்கள் முதலில் வெளிவந்தன. பிறகு அவர்கள் கொல்லப்படுவதற்கு முன்பு உயிரோடு ராணுவத்தின் பிடியில் இருக்கும் காட்சிகள் வெளிவந்தன. யுத்தத்தில் பிடிக்கப்பட்டவர்கள், பெண்கள், குழந்தைகள் தொடர்பான அத்தனை சர்வதேச போர் நெறிமுறைகளையும் காலில் போட்டு மிதித்துவிட்டு கற்பனைக்கெட்டாத கொடூரங்களை இலங்கை ராணுவமும் அரசும் நிறைவேற்றியிருக்கிறது. அந்தக் காட்சிகள் அதை செய்த அவர்களது ராணுவத்தாலேயே  துல்லியமாகப் படம் பிடிக்கப்பட்டிருக்கின்றன. உலகத்தில் பல நாடுகளில் போர்க்குற்றம் சார்ந்த விசாரணைகள் வாக்குமூலங்களின் அடிப்படையிலும் அனுமானங்களின் அடிப்படையிலும்தான் மேற்கொள்ளப்பட்டிருக் கின்றன. நாஜிகளின் கொடுமைகளுக்குக்கூட இந்த அளவு நேரடி காட்சிப் பதிவுகள் இல்லை. அந்த அளவிற்கு ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்கள் மிகத் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. 

வடக்கு மாகாண சபை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த மாநாட்டை எதிர்க்கவில்லை என்று இந்தியா கலந்துகொள்வதை ஆதரிக்கும் சிலர் வாதிடுகிறார்கள். எந்த அதிகாரமுமில்லாத வடக்கு மாகாண சபையினை ஆட்சி செய்யும் அமைப்பு தமிழர்களின் அரசியல் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக எஞ்சியிருக்கும் சிறிய வாய்ப்புகளைப் பயன்படுத்தும் பொருட்டு அது இப்போதைக்கு ராஜபக்ஷேவுடன் இணங்கிப் போக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. அது உள்ளூர் அரசியல் பிரச்சினை. ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்கள் என்பது சர்வதேச மனித உரிமைப் பிரச்சினை. இது தொடர்பாக உலகெங்கும் உள்ள தமிழர்களும் மனித உரிமையாளர்களும் எடுக்கும் முயற்சிகளை விமர்சிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எந்த உரிமையும் இல்லை. சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பான விஷயங்களில் எப்படி அந்த நாட்டின் உள்ளூர் அரசியல் குழுக்கள் முடிவெடுக்க முடியாதோ அதேபோலத்தான் ராஜபக்ஷேவின் போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கையில் உள்ள எந்த அரசியல் குழுவும் முடிவெடுக்க முடியாது. 

இலங்கை அரசு நிகழ்த்திய போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை முற்றாக வெளிச்சத்திற்கு வந்துவிட்டன. ஐ.நா. ஆவணங்கள், சேனல் 4 ஆவணப் படங்கள், டப்ளின் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் வெளிப்படுத்திய உண்மைகள், பான்கி மூனே ஒப்புக் கொண்ட உண்மைகள், சார்லர் பெப்ரி அளித்துள்ள ஆய்வறிக்கை, ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை கொழும்பிலேயே அளித்த பேட்டி ஆகியவை ஆயிரம் ஆயிரம் இலங்கை போர்க்குற்றச் சாட்சியங்களை வெளிப்படுத்தியிருக்கின்றன. இலங்கையில் நீதி அமைப்பு முற்றாக சீர்குலைக்கப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்படுகின்றனர், தாக்கப்படுகின்றனர். காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. போர்க்குற்ற விசாரணை எதுவும் முறையாக நடைபெறவில்லை. உரிய நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் பரவலாக நடைபெற்று வருகின்றன. தமிழர் பகுதிகள் முழுக்க முழுக்க ராணுவத்தின்  கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதைப்பற்றியெல்லாம் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் தொடர்ந்து குரல் எழுப்புகின்றன. காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ள வேண்டாம் என்று கெஞ்சுகின்றன. ஆனால் இந்தக் கொடூரங்கள் பற்றி இந்தியாவிற்கு எந்த கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. 

மாறாக இந்தக் கொடூரமான குற்றவாளியைப் பாதுகாக்கும் வேலையை இந்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. இந்தியாவின் வெளியுறவுத்துறை அதிகாரி களும் இலங்கையில் உள்ள இந்திய அதிகாரிகளும் ராஜபக்சேயின் ஊழியர்கள் போல செயல்பட்டு வருகின்றனர். காமன் வெல்த் செயலாளர் கமலேஷ் ஷர்மா இலங்கையின் குற்றங்களை மூடி மறைப்பதில் தீவிரமாக செயல்படுகிறார். வரலாற்றின் மிகக்கொடூரமான குற்றவாளிகளான ராஜபக்ஷேவும் கோத்தபய  ராஜபக்ஷேவும் அரச விருந்தாளிகளாக இந்தியா வந்து செல் கின்றனர். ஆனால் இலங்கையின் போர்க் குற்றங்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த சேனல்-4 ஆவணப்பட இயக்குனர் கெல்லம் மெக்கரே இந்தியா வருவதற்கான விஸாவை இந்திய அரசு கடந்த எட்டு மாதங்களாக எந்தக் காரணமும் இல்லாமல் மறுத்து வருகிறது. கெல்லம் மெக்கரேவுக்கு இலங்கை விஸா மறுத்தால் அதை புரிந்துகொள்ளலாம். இந்தியா மறுப்பதை எப்படிப் புரிந்துகொள்வது? பயங்கரவாதிகள் அரச விருந்தாளிகளாக நடத்தப்படுகிறார்கள். பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்கள் பயங்கரவாதிகள்போல நடத்தப்படுகிறார்கள். இந்திய அரசு இலங்கையின் வெளியுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிறதா? இலங்கையில் முதலீடு செய்திருக்கும் இந்திய பெருமுத லாளிகளின் நலன்களைப் பாதுகாப்பதைத் தவிர இந்திய அரசாங்கத்திற்கு எந்த  சர்வதேச நெறிமுறை சார்ந்த கொள்கையும் கிடையாதா? 

காங்கிரஸ், தமிழர்களுக்கு இன்னொரு துரோகத்திற்கு தயாராகி வருகிறதோ என்ற சந்தேகம் ஆழமாக எழுகிறது.

 உஷ்!

கார்ப்பரேட்டு களுக்கான காலம் இது. வாரியாரின் சீடனாய் வலம்வந்த வர், வம்புகளில் சிக்கிய போதும், அந்த உண வகத்தின் அமோக விற்பனையில் மாற்றம் இல்லை. திடீரென அந்த குழுமத்தையே, ரூ.1,700 கோடிக்கு விலைபேசி வாங்கிவிட்டதாக, தொலைக்காட்சி சகோதரர்களைக் கைகாட்டுகிறார்கள். உணவகத்து ஆட்களோ, மறுக் கிறார்கள். ஒருவேளை, அவய்ங்களே கிளப்பி விட்டுருப்பாய்ங்களோ. 

ad

ad