புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 டிச., 2013

டர்பன் டெஸ்ட் போட்டியில் காலிஸ்-டிவில்லியர்ஸ் அபாரம்: தென் ஆப்பிரிக்கா 299 ரன் குவிப்பு
இந்தியா–தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான 2–வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் இந்தியா ஒரு விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்திருந்தது.
91 ரன்களுடன் களத்தில் இருந்த முரளி விஜயும், 68 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த புஜாராவும் 2ம் நாள் ஆட்டத்தின்போது சிறந்த ஸ்கோரை எட்டுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்திய அணியை ஸ்டெயின் தனது பந்து வீச்சில் சீர்குலைத்தனர். 

முதலில் புஜாராவை (70ரன்) வெளியேற்றினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஜய் 97 ரன்னில் ஸ்டெயின் பந்தில் ஆட்டமிழந்தார். ரோகித் சர்மா டக் அவுட் ஆனார். கோலி (46ரன்)–ரகானே (51ரன்) ஜோடி தாக்கு பிடித்து விளையாடியது. அதன்பின் விக்கெட்டுகள் சரிந்தன. இந்திய அணி 334 ரன்னுக்கு ஆல்–அவுட் ஆனது. ஸ்டெயின் 6 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 

அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 82 ரன் எடுத்திருந்தது. கேப்டன் ஸ்மித் 35 ரன்னுடனும் பீட்டர்சன் 46 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

இன்று 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து விளையாடிய ஸ்மித்தை சிறிது நேரத்தில் வெளியேற்றினார் ஜடேஜா. ஸ்மித் 47 ரன்கள் சேர்த்தார். அவரையடுத்து வந்த அம்லாவை (3) முகமது ஷமி விரைவில் அவுட் ஆக்கினார். ஜடேஜா வீசிய அடுத்த ஓவரின் முதல் பந்திலேயே பீட்டர்சன் (62) ஆட்டமிழந்தார். 

ஆனால், 4-வது விக்கெட்டுக்கு இணைந்த காலிசும் டிவில்லியர்சும் நிலைத்து நின்றதால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு டிவில்லியர்சை(74) அவுட் ஆக்கி இந்த ஜோடியை பிரித்தார் ஜடேஜா. அணியின் ஸ்கோர் 298ஐ தொட்டபோது 28 ரன்களில் எல்.பி.டபுள்யூ. ஆகி பெவிலியன் திரும்பினார் டுமினி. 

இதனால் 3ம் நாள் ஆட்ட நேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்துள்ளது. காலிஸ் 78 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்றைய ஆட்டத்தின்போது ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். நாளை 4ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

ad

ad