இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக பத்திரிகையாளர் விடுதலை
இந்நிலையில், இலங்கைக்கு சுற்றுலா விசாவில் சென்ற மகா தமிழ்
பிரபாகரன் அங்குள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினரான பசுபதி பிள்ளை மற்றும் கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினர் எஸ்.தயாபரன் ஆகியோருடன் சேர்ந்து பொன்னவெளியிலுள்ள தேவாலயத்தின் பங்குத்தந்தையுடன் உரையாடிக்கொண்டிருந்தார்.
அப்போது அவரை ராணுவத்தினரும், காவல்துறையினரும் இடைமறித்து கைது செய்தனர். தமிழ் பிரபாகரனிடம் இருந்த கேமராவும் பறிமுதல் செய்யப்பட்டது.
சுற்றுலா விசாவை மீறி கிளிநொச்சியில் உள்ள ராணுவ முகாமை தமிழ் பிரபாகரன் படம் பிடித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்குப்பின் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். மகா தமிழ் பிரபாகரனிடம் இலங்கை புலனாய்வுத் துறை போலீசார் தொடர்ந்து விசாரித்து வந்தனர்.
இந்த விசாரணை முடிவடைந்ததையடுத்து அவரை இன்று விடுவித்த ராணுவம், குடியேற்றத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தது. அவர்கள் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, தமிழ் பிரபாகரன் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து இலங்கை காவல்துறை செய்தித் தொடர்பாளர் அஜித் ரோஹானா கூறுகையில், “தமிழ்நாட்டைச் சேர்ந்த 24 வயதான தமிழ் பிரபாகரன், காவல்துறையின் பயங்கரவாத விசாரணைப் பிரிவில் விசாரிக்கப்பட்டு குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்ததன்மூலம் நாட்டிற்கு எதிராக தவறான தகவலை பரப்பும் முயற்சியை தடுக்க முடிந்தது” என்றார