பாகிஸ்தான் பிரதமரின் அறிவுரையாளர் குண்டுவெடிப்பில்
உயிர் தப்பினார்: பாதுகாவலர் 6 பேர் பலி
உயிர் தப்பினார்: பாதுகாவலர் 6 பேர் பலி
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் அறிவுரையாளாரும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் துணைத்தலைவருமாக இருப்பவர் அமிர் முகாம். இன்று, இவர் தீவிரவாதிகள் அதிகம் நடமாட்டமுள்ள கைபர் பகுதுன்காவா மாகாண ஷாங்லா மாவட்ட
அப்போது அப்பகுதி சாலையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த குண்டினை தீவிரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் அமீர் முகாம் மயிரிழையில் உயிர்தப்பினார். ஆனால் அவரது பாதுகாப்பு படையை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். அமீர் முகாம் இதுபோன்று பல தாக்குதலில் இருந்து தப்பித்தவர் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இருந்தும் இது பாகிஸ்தான் தலிபான்களின் நடவடிக்கைதான் என்று கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு பிரதமர் நவாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.