புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஜன., 2014

அமெரிக்க தூதரை அழைத்து விளக்கம் கோரும் தீர்மானத்தில் இருந்து இலங்கை அரசாங்கம் பின்வாங்கியது
முல்லைத்தீவு புதுமாத்தளனில், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இலங்கை படையினரால் கொல்லப்பட்டதாக அமெரிக்க தூதரகம் வெளியிட்ட தகவல் தொடர்பில் விளக்கமளிக்க அமெரிக்க தூதுவர் உத்தியோகபூர்வமாக அழைக்கப்படமாட்டார் என்று இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக்குமாறு தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சு செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த விடயம் தொடர்பில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்சல் சிசனை உத்தியோகபூர்வமாக அழைத்து எச்சரிப்பது என்று அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
எனினும் தற்போது அதில் இருந்து அரசாங்கம் பின்வாங்கியுள்ளது.
இந்தநிலையில் அரசாங்க உயர்மட்ட சந்திப்பு ஒன்றின் போது ஜெனீவா மாநாட்டுக்கு முன்னரேயே அமெரிக்காவின் இந்தக் கருத்து முன்கூட்டியே வழங்கப்பட்டதாக தீர்ப்பாக அமைந்துள்ளது என்று அமைச்சர் விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை புதுமாத்தளன் பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து அமெரிக்காவின் போர்க்குறற தூதுவர் ஸ்டீபன் ராப்பும் இலங்கையின் தூதுவர் மிச்சல் சிசனும் நன்கு அறிந்திருக்கிறார்கள்.
இது தொடர்பில் அவர்கள், முன்னைய போர் சூனிய வலயம் சர்வதேச நிபுணர்களின் கருத்துக்களையும் பெற்றுள்ளார்கள் என்று அமெரிக்க தூதரக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இறுதிப் போரின் போது இடம்பெற்றவை குறித்து விசாரணை செய்வதற்காக அமெரிக்க அரசாங்கம் ஏற்கனவே 1.18 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
எனவே அதனைக் கொண்டு இறுதிப் போரில் இடம்பெற்றவை குறித்து உண்மைகளை கண்டறிய இலங்கை அரசாங்கம் முயலவேண்டும்
இதற்காக உதவுவதற்கு அமெரிக்கா தயாராகவே உள்ளது என்றும் அமெரிக்க தூதரக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

ad

ad