புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜன., 2014

நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நடிகையுடனான தொடர்பை, அம்பலப்படுத்திய பத்திரிகைக்கு, பிரான்ஸ் அதிபர் பிராங்காய்ஸ் ஹோலன்ட் கண்டனம் தெரிவித்துள்ளார்.பிரான்ஸ் அதிபர், பிராங்காய்ஸ் ஹோலண்ட்(வயது59), கடந்த, 2007 முதல், பத்திரிகையாளரான, வலேரி டிரியர்வேலர், (வயது41), என்ற பெண்ணுடன், வசித்து வருகிறார். இருவரும் ஏற்கனவே திருமணமாகி, முதல் துணையை விவாகரத்து செய்தவர்கள். 
இருவருக்கும் திருமண வயதில் பிள்ளைகள் உள்ளனர். இதற்கிடையே, பிரான்ஸ் நடிகை, ஜூலி கயாட்டுக்கும், அதிபர் பிராங்காய்சுக்கும் இடையே தொடர்பு உள்ளதாக, சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டு வந்தன. தொலைகாட்சி மற்றும் திரைப்பட நடிகையான ஜூலிக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளன. இவர், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இருவருக்குமிடையிலான உறவை, புகைப்படங்கள் ஆதாரத்துடன், அந்நாட்டு, 'குளோசர்' பத்திரிகை, அட்டை பட செய்தியாக வெளியிட்டுள்ளது.
 
குளோசர் பத்திரிகையில் கூறியிருப்பதாவது: அதிபர் பிராங்காய்ஸ், பணி முடிந்த பின், வலேரியுடன் சென்று தங்குவது வழக்கம். ஆனால், புத்தாண்டு அன்று இரவு, அதிபர், தன் மாளிகைக்கு செல்லாமல், நடிகையுடன் தங்கியிருந்தார். 
 
அதிபர் மாளிகையின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்ட நிலையில், சம்பவ தினத்தன்று, ஒரே ஒரு பாதுகாவலருடன் சென்று, நடிகையுடன் தங்கியுள்ளார். இவ்வாறு அந்த பத்திரிகை, புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது. 
அதிபரின் இந்த செயல், பிரான்ஸ் அரசியல்வாதிகளின் கலாசாரத்தை உறுதி செய்துள்ளது. பத்திரிகை செய்தியை அதிபர் மறுக்கவில்லை. ஆனால், 'ஒவ்வொரு குடிமகனுக்கும் இருப்பது போல எனக்கும் சில அந்தரங்கம் இருக்கிறது. இதை பகிரங்கப்படுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என, சம்பந்தப்பட்ட பத்திரிகைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 
 

ad

ad