புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2014



 ஜெனீவா அமர்வின்போதுநடவடிக்கைகள் தொடர்பில் கோரிக்கையைஜனாதிபதி புறக்கணித்து விட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார 
இலங்கையின் முக்கிய ஆறு அமைச்சர்கள் விடுத்த வேண்டுகோளை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மதிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆரம்பமாகும் ஜெனீவா அமர்வின்போது இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், அது குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் இந்த அமைச்சர்கள் குழு ஜனாதிபதிக்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.
எனினும் அதனை ஜனாதிபதி உதாசீனப்படுத்தியுள்ளார்.
ஜெனீவா மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை போன்ற விடயங்கள் முன்வைக்கப்பட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்காக சட்டக்குழு ஒன்றையும் பொருளாதார நிபுணர் குழு ஒன்றையும் அமைக்க வேண்டும் என்று அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித சேனாரத்ன, திஸ்ஸ விதாரண, நவின் திஸாநாயக்க, ரெஜினோல்ட் குரே, டியு குணசேகர ஆகியோர் கோரிக்கை விடுத்தனர்.
எனினும் ஜனாதிபதி இந்தக் கோரிக்கையை புறக்கணித்து விட்டதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

ad

ad