புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 மார்., 2014

 வடக்கு, கிழக்கு சொந்தங்கள் தமக்கு கிடைத்த வாக்குரிமை என்ற ஆயுதத்தை சரிவரப்பயன்படுத்தி, தமிழர் பலத்தை முழு உலகுக்கும் காட்டினர்.ஜனநாயக மக்கள் முன்னணியின் வேட்பாளர் ராஜேந்தி 
தலைநகரில் வாழும் தமிழ் வாக்காளர்கள் ஓரணியில் திரண்டுவந்து, தமிழினத்தின் எழுச்சிப் பயணத்துக்கு புதியதொரு உந்துசக்தியை வழங்க வேண்டும் என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் மேல்மாகாணசபை வேட்பாளருமான எஸ். இராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். 
பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் பலத்தை சிதைத்தவர்களுக்கு வாக்களிப்பதா? நந்திக்கடலில் தமிழினத்தை அழித்தவர்களுக்கு வாக்களிப்பதா? மலையக மக்களின் வயிற்றில் அடித்து அரசுக்கு துதிப்பாடுபவர்களுக்கு வாக்களிப்பதா? தமிழன் என கூறிக்கொண்டு எட்டப்பர்களாக செயற்படும் இனத்துரோகிகளுக்கு வாக்களிப்பதா?
இவர்களுள் எவரேனும் ஒருவருக்கு தமிழர்கள் வாக்களிப்பார்களானால், அது நாளைய வரலாற்று ஏட்டில் தமிழினத்துக்கு எதிரான துரோகச் செயலாகவே நிச்சயம் பதிவாகும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
எனவே, தமிழர் உரிமைக்காக குரல்கொடுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியை ஆதரித்து சரித்திரம் படைக்க தயாராக வேண்டியது தமிழர்களின் கடப்பாடாகும் என்றும் இராஜேந்திரன் தெரிவித்தார்.
இராஜேந்திரன் நற்பணிமன்றத்தின் ஏற்பாட்டில் மட்டகுளிய பகுதியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
அலைகடலென திரண்டுவந்து எனக்கு ஆதரவு மாலை அணிவிக்கும் எம் சொந்தங்களின் விண்ணதிரும் கரகோ­ங்களை கேட்கையில், ஜனநாயக மக்கள் முன்னணி இம்முறை தலைநகரில் சரித்திர வெற்றியை பதிவுசெய்யும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எமக்கு ஏற்பட்டுள்ளது ஏற்பட்டுவிட்டது.
குறிப்பாக வாக்கு வேட்டைக்காக பலரும் இன்று பலவிதமான செயற்பாடுகளின் ஈடுபட்டு வருகின்றனர். எவர் எதைச் செய்தாலும், எமது வெற்றிக் கொடிதான் எதிர்வரும் 30ம் திகதி தலைநகர் தமிழர் மத்தியில் பறக்கும் என்ற செய்தியை ஆணித்தரமாக கூறிவைக்க விரும்புகின்றேன்.
மேல்மாகாணத்தில் வாழும் தமிழர்களிடம் வாக்குகேட்பதற்கு தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் பாடுபடும், செயற்பாட்டு அரசியலை நடத்தும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கே முழு உரித்தும் இருக்கின்றது. வேறு யாருக்கும் இந்த உரிமை இல்லை என்பது மக்களுக்கும் இன்று தெளிவாக தெரியவந்துள்ளது.
அதேவேளை, அன்று வன்னியில் போர்மேகம் சூழந்து குண்டுமழை பொழிகையில், இரத்த வெள்ளத்தில் எமது தமிழ் சொந்தங்கள் மூழ்கின. மேலும் சிலர் உயிரைத் தவிர ஏனைய அனைத்தையும் இழந்தனர்.
தலைநகரில் பலர் காணாமல் போனார்கள். இவர்களுக்காக பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எமது தலைவர் மனோ கணேசன்தான் குரல்கொடுத்தார்.
எமது கட்சிதான் தலைநகரில் இருந்துகொண்டு அவர்களின் விடிவுக்காக போராடியது. இவ்வாறு அனைத்தையும் இழந்த நிலையில் இருந்த எமது வடக்கு, கிழக்கு சொந்தங்கள் தமக்கு கிடைத்த வாக்குரிமை என்ற ஆயுதத்தை சரிவரப்பயன்படுத்தி, தமிழர் பலத்தை முழு உலகுக்கும் காட்டினர்.
தமிழ் மக்கள் நந்திக் கடல் முனையில் ஐயோ, ஐயோ என இட்ட மரண ஓலமும், தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கு வழங்கிய அமோக ஆணையும்தான் இன்று சர்வதேசத்தை தமிழ் பக்கம் திரும்ப வைத்துள்ளது.
எனவே, தலைநகர் வாழ் தமிழ் வாக்காளர்களும் தமது வாக்குகளை தமிழர்களுக்காக குரல்கொடுக்கும் எமக்கு வழங்கி, தமிழின் எழுச்சிப் பயணத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன்.
அச்சம் வேண்டாம் எம் தோழர்களே, தமிழர்களாகிய நாம் ஆளப்பிறந்தவர்கள். எவருக்கும் அடிபணியவேண்டியதில்லை. அடக்கியாளமுற்பட்டாலும் இனி அதற்கு இடம்கொடுக்கப் போவதில்லை. நிச்சயம் ஒரு நாள், எமக்காகவும் நீதி தேவதை கண் திறப்பாள். அப்போது, தமிழர்களை கடந்தகாலங்களில் அடக்கியாள முற்பட்டவர்கள் அதற்கான பிரதிபலன்களை நிச்சயம் அனுபவிக்க நேரிடும்.
அதிகார பரவலாக்களைகோரும் தமிழர்களுக்கு தெற்கில் இன்று இனவாதி என்ற முத்திரை குத்தப்படுகின்றது. தமிழர்கள் இந்த அரசிடம் பிச்சை கேட்கவில்லை. நாட்டின் அரசமைப்பிலுள்ள அதிகார பரவலாக்களையே கேட்கின்றனர்.
ஐ.நா. சாசனத்திலும் இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, தப்பு கணக்கு போட்டு தப்பிவிடலாம் என அதிகார வர்க்கம் நினைக்ககூடாது. தமிழர்களுக்கு விரைவில் தீர்வை முன்வைக்காவிட்டால், அதன் விளைவுகளும் பாரதூரமாகவே அமையும் என்றார்.

ad

ad