புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஏப்., 2014

 
 
யாழ்ப்பாணம் புங்குடுதீவு சிவலப்பிட்டி சனசமூக நிலையமும் அம்பாள் விளையாட்டுக் கழகமும் இணைந்து ஆண்டு நிறைவு விழாவையும் பரிசளிப்பு விழாவையும் அண்மையில் சிறப்புற நடத்தியுள்ளன.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களையும் வழி நடத்தியவர்களையும் மதிப்பளித்து பாராட்டி இந்த விழா சிறப்புற நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பல்கலைகழக பேராசிரியர் வேல்நம்பி கலந்து கொள்ள, யாழ். மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன், வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், சமாதான நீதவான் சண்முகலிங்கம், ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் உட்பட பல அறிவுசார் அனுபவம் சார் பிரமுகர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்து உரை நிகழ்த்தினர்.

சிறப்புரையாற்றிய பேராசிரியர் வேல்.நம்பி.
இங்கு நான் பல விடயங்களை இங்கு கலந்துகொண்டவர்கள் மற்றும் பேசியவர்களிடமிருந்து அறிய முடிந்தது. இத்தீவக மண்ணின் மைந்தர்கள் நாடுபூராவும் பல்வேறு இடங்களிலும் பல்வேறுதுறைகளிலும் வாழ்கிறார்கள்.
அவர்கள் இந்த மண்ணை நினைக்கின்றார்கள், அதற்காக பாடுபடுகின்றார்கள். நமக்கு கிடைக்கக்கூடிய அரும்பெரும் சொத்து நமது பாரம்பாரியங்களை கட்டிக்காத்து, நமது அடையாளத்தை பேணும்பண்பு. அதற்காக இந்த கிராமம் பாடுபடுவதை என்னால் உணரமுடிகின்றது.
இன்று எமது பாராம்பரியங்களை இன அடையாளங்களை சிதைப்பதற்கு பலர் முனைந்தாலும் நாம் எமக்கென்றொரு சுயகட்டுப்பாட்டை பேணி எதை நாம் செய்யவேண்டும்.
எதை நாம் செய்யக்கூடாது என்பதை நாமே முடிவெடுத்து வாழ வேண்டும். அதன்மூலமே நாம் எமது பாரம்பரியத்தை கல்வியை பேணமுடியும். அதன் மூலமே தமிழர் தாயகத்தின் இருப்பையும் காக்க முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம், தனது கருத்தில் தீவகத்தில் காணப்படுகின்ற கல்வி, வள மற்றும் வீதி குறைபாடுகள் தொடர்பாகவும் அதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தொடர்பாகவும் குறிப்பிட்டதுடன், தீவகத்தை மேம்படுத்த எத்தனை சவால்கள் வரினும் உழைப்போம் என உறுதி அளித்தார்.

ad

ad