புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

26 மே, 2014


கேபினெட் அமைச்சர்களாக பதவியேற்ற 23 பேர் விபரம்

இந்திய பிரதமராக நரேந்திர மோடி திங்கள்கிழமை பதவியேற்றார். குடியரசுத் தலைவர் மாளிகை முற்றத்தில் மாலை 6மணிக்கு நடைபெற்ற விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப்
முகர்ஜி, மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இதைத் தொடர்ந்து கேபினெட் அமைச்சர்களுக்கும் பிரணாப் முகர்ஜி, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்-, வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி, சதானந்த கவுடா, உமாபாரதி, நஜ்மா ஹெப்துல்லா, கோபிநாத் முண்டே, ராம்விலாஸ் பாஸ்வான், கல்ராஜ் மிஸ்ரா, மேனகா காந்தி, ஆனந்த குமார், ரவிசங்கர் பிரசாத், அசோக்கஜபதி ராஜூ, ஆனந்த் கீதே, ஹர்சிம்ரட் கவ்ர் பாதல், நரேந்திர சிங் டோமர், ஜுவல் ஒரம், ராதா மோகன் சிங், தவார் சந்த் கேலாட், ஸ்மிருதி இராணி, ஹர்சவர்த்தன் ஆகியோர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றனர்.